என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பணம் மோசடி
    X
    பணம் மோசடி

    பெண்ணிடம் ரூ.6 லட்சம் மோசடி

    வேலை வாங்கித்தருவதாக கூறி பெண்ணிடம் ரூ.6 லட்சம் மோசடி செய்த 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
    மதுரை

    தேனி மாவட்டம் பாலூத்து நடுத்தெருவை சேர்ந்தவர் மருதுபாண்டியன் (வயது 30), எலக்ட்ரீசியன்.  இவரது மனைவி பட்டப் படிப்பு முடித்துள்ளார். மருதுபாண்டியன், மனை விக்கு அரசுவேலை தேடிக் கொண்டிருந்தார். 

    அப்போது மருதுபாண்டியனுக்கு, மதுரை அச்சம்பட்டியைச் சேர்ந்த எலக்ட்ரீசியன் சரவணன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.

    அப்போது சரவணன் “மதுரை கலெக்டர் அலுவ லகத்தில் எனக்கு தெரிந்த 2 பேர் வேலை பார்த்து வருகின்றனர். அவர்களிடம் பணம் கொடுத்தால் நிச்சய மாக ஜூனியர் அசிஸ்டென்ட் வேலை வாங்கி விடலாம்“ என்று ஆசைவார்த்தை கூறி உள்ளார். இதனை நம்பிய மருதுபாண்டியன் ரூ.6 லட்சம் பணத்துடன் மனைவியை அழைத்துக்கொண்டு மதுரை கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார். 

    அப்போது அவருக்கு மதுரை சிறுவாலை வடக்குத்தெரு கருப்பையா, தேனி மாவட்டம் வளையப்பட்டி முத்துப்பாண்டி ஆகியோரை சரவணன் அறிமுகம் செய்து வைத்தார்.

    அதன் பிறகு “இவர்கள் மதுரை கலெக்டர் அலுவ லகத்தில் வேலை பார்த்து வருகின்றனர். உங்கள் மனைவி வேலைதொடர்பாக நான் ஏற்கனவே இவர்களிடம் பேசி முடித்து விட்டேன். நீங்கள் அவர்களிடம் பணத்தை கொடுங்கள் என்று தெரிவித்துள்ளார். 

    மருதுபாண்டியன் மேற்கண்ட 3 பேரிடமும் ரூ. 6 லட்சத்தை கொடுத்தார்.  பணத்தை பெற்றுக்கொண்ட அவர்கள் “உங்கள் மனைவிக்கு கலெக்டர் அலுவலகத்தில் ஜூனியர் அசிஸ்டென்ட் வேலை கிடைக்கும்“ என்று வாக்குறுதி கொடுத்தனர்.

     இதனை நம்பிய மருது பாண்டியன் மனைவியுடன் ஊருக்கு புறப்பட்டுச் சென்றார். மாதங்கள் உருண்டோடின. ஆனாலும் அரசு வேலைக்கான உத்தரவு வரவில்லை. 

    மருதுபாண்டியன் இது தொடர்பாக 3 பேரிடமும் கேட்டுள்ளார். அதற்கு அவர்கள் இன்னும் சில நாட்களில் வேலைநியமன உத்தரவு வீடு தேடி வரும் என்று தெரிவித்துள்ளனர். 

    இந்தநிலையில் மருதுபாண்டியன் வீட்டுக்கு வேலைநியமன உத்தரவு வந்தது. அதில், “மதுரை கலெக்டர் அலுவலகத்தில் ஜூனியர் அசிஸ்டென்ட் பணியிடத்துக்கு நீங்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளீர் கள். நீங்கள் உடனடியாக பணியில் சேரவேண்டும்“ என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

    இதையடுத்து மருதுபாண்டியன் மனைவியுடன் மதுரை கலெக்டர் அலுவல கத்திற்கு புறப்பட்டு வந்தார். அங்கிருந்த அதிகாரிகளிடம் உத்தரவை காண்பித்தார். இதனைப்பார்த்த ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். “கலெக்டர் அலுவலகத்தில் ஜூனியர் அசிஸ்டென்ட் பணியிடம் டி.என்.பி.எஸ்.சி. மூலம் நிரப்பப்படுகிறது. 

    நேரடிநியமனம் செய்யப்படுவதில்லை. உங்களை யாரோ ஏமாற்றி உள்ளனர் என்று தெரிவித்தனர். அப்போதுதான் எலக்ட்ரீசியன் சரவணன் அறிமுகப் படுத்திய கருப்பையா, முத்துப் பாண்டி ஆகிய 2பேரும் கலெக்டர் அலுவலகத்தில் வேலை பார்க்க வில்லை என்ற விவரமும் மருதுபாண்டிக்கு தெரியவந்தது. 

    இதனைதொடர்ந்து “நான் உங்களிடம் கொடுத்த ரூ. 6 லட்சத்தை திருப்பிக் கொடுங்கள்” என்று கேட்டுள்ளார். அதற்கு அவர்கள் மறுத்து விட்டனர். இதுகுறித்து மருதுபாண்டியன் தல்லாகுளம் போலீசில் புகார் செய்தார். 

    போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுவாலை வடக்குத்தெரு கருப்பையா, அச்சம்பட்டி எலக்ட்ரீசியன் சரவணன், தேனி மாவட்டம் வளையப்பட்டி முத்துப்பாண்டி ஆகியோரை தேடி வருகின்றனர்.

    Next Story
    ×