என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பிலோமின்ராஜ்
    X
    பிலோமின்ராஜ்

    புனித லூர்து அன்னை ஆலய பொன் விழா

    தஞ்சையில் இன்று புனித லூர்து அன்னை ஆலய வெள்ளி விழா கொண்டாட்டம் நடைபெறும் என பங்கு தந்தை பிலோமின்ராஜ் தகவல் தெரிவித்துள்ளார்.
    தஞ்சை:

    தஞ்சை மருத்துவக் கல்லூரி சாலை, புனித லூர்து அன்னை ஆலய அர்ச்சிப்பு பொன்விழா, தஞ்சை மறைமாவட்ட ஆயரின் திருநிலைப்பாட்டு வெள்ளி விழா ஆகிய விழாக்கள் இன்று 23ம் தேதி சனிக்கிழமை மாலை 6 மணிக்கு ஆலயம் அமைந்துள்ள மங்களபுரத்தில் நடைபெற இருப்பதாக பங்கு தந்தை பிலோமின்ராஜ் தெரிவித்தார்.

    இது குறித்து பங்கு தந்தை கூறும்போது, இந்த பேராலயமானது, 1970ம் ஆண்டு தஞ்சை எஸ்எம்டி பஸ் உரிமையாளர் டி.ஏ.ஞானரத்தினம் பிள்ளை யாரிடமும் எதையும் எதிர்பாராமல் தனி ஆளாக இருந்து தன் சொந்த செலவில் கட்டிடத்தை கட்டிக் கொடுத்தார்.

    2020ம் ஆண்டு இந்த பேராலயத்திற்கு பொன்விழா ஆண்டாகும். இருப்பினும் கொரோனா காலம் என்பதால் 50 ஆண்டை குறிக்கும் வகையில் தள்ளிவைக்கப்பட்ட விழாவானது இந்த ஆண்டு 2022-ல் சீரும், சிறப்புடன் கொண்டாடப்படுகிறது.

    இந்த விழாவுடன், தஞ்சை மறைமாவட்ட ஆயர் தேவதாஸ் அம்புரோஸ் திருநிலைப்பாட்டு 25-ம் ஆண்டும் இந்த ஆண்டு கடைபிடிக்கப்படுவதால், வெள்ளி விழாவாக கொண்டாடப்படுகிறது.

    இந்த 2 விழாவிலும் தேவதாஸ் அம்புரோஸ் தலைமை வகிக்கிறார்கள். விழாவினை மெருகூட்டும் விதமாக ஆலய முகப்பு புதுப்பொலிவுடன் அழகுற மாற்றப்பட்டுள்ளது. சீர்மிகு தஞ்சையை வரவேற்கும் விதமாக, புதிதாக கெபி உருவாக்கப்பட்டுள்ளது. 

    சுற்றுவட்ட பாதையுடன், இரண்டு நுழைவாயில் புதிதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. பீடம், விழா அரங்கம், அலுவலகம், விழாக்கள் நடத்த மஹால் ஆகியவை தற்போதைய காலத்திற்கேற்ப புனரமைக்கப்பட்டுள்ளது.

    அனைத்து மதத்தினரும் வருகை தந்து வணங்கும் இந்த புனித லூர்து அன்னை ஆலயத்தில், 2வது சனிக்கிழமை தேர்பவனியும், அதனை தொடர்ந்து ரோஜா மலர் மந்தரித்து வழங்கும் நிகழ்வும் பழமை மாறாமல் நடத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

    இந்த 2 விழாவிலும் அனைவரும் கலந்து கொண்டு புனித லூர்து அன்னையின் ஆசீரை பெற அழைக்கிறேன் என பங்கு தந்தை பிலோமின்ராஜ் தெரிவிக்கிறார். ஏற்பாடுகளை உதவி பங்கு தந்தை சந்தனராஜ் மற்றும் ஆலய பங்கைச்சார்ந்த அனைவரும் செய்து வருகின்றனர்.
    Next Story
    ×