என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  பறிமுதல் செய்யப்பட்ட பணம், செல்போன் மற்றும் செயின் மற்றும் கைதான ஹரிஹரன் என்கிற சண்டியர் ஹரி.
  X
  பறிமுதல் செய்யப்பட்ட பணம், செல்போன் மற்றும் செயின் மற்றும் கைதான ஹரிஹரன் என்கிற சண்டியர் ஹரி.

  சித்தாள் கூலிப்பெண்ணிடம் வழிப்பறி செய்தவர் கைது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பட்டுக்கோட்டையில் சித்தாள் கூலிப்பெண்ணிடம் வழிப்பறி செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
  பட்டுக்கோட்டை:

  பட்டுக்கோட்டை முடிபூண்டார் நகர் 4-வது தெருவில் உள்ள மாமி என்பவரின் வீட்டிற்கு வந்த அவரது தோழியிடம் மாமி வீட்டு அருகே வைத்து வழிப்பறி செய்த மூவரில் ஒருவர் கைது செய்யப்பட்டு, இருவர் தப்பி ஓடிவிட்டனர்.

  பேராவூரணி ஆவணம் ரோடு பகுதியை சேர்ந்த அருண் குமார் என்பவரது மனைவி ரேவதி (வயது 32), இவர் பட்டுக்கோட்டைக்கு சித்தாள் வேலைக்கு வந்த-தாகவும், வேலை இல்லாததால் சம்பவ இடத்தில் உள்ள தனது தோழியான மாமி என்கிற முஸ்லிம் பெண் வீட்டிற்கு சென்று தங்கிவிட்டு மாலை 4 மணி அளவில் அவரது தோழியான மாமி வீட்டில் இருந்து வெளியே வந்த-போது, அங்கே வந்த 3 பேர் ஆளுக்கு ஒரு அரிவாளை கையில் வைத்துக்கொண்டு மிரட்டினர்.

  இதில் பட்டுக்கோட்டை, தெற்கு காளியம்மன் கோவில் தெரு ஹரிஹரன் என்கிற சண்டியர் ஹரி (வயது 23), வாதியின் இடுப்பில் இருந்த செல்-போனை பறிதுள்ளார். 

  முடிபூண்டார் நகர் பகுதியைச் சேர்ந்த பிரேம் ரேவதியின் கையில் இருந்த ஆயிரம் ரூபாய் பணத்தையும், வஉசி நகர் ஹரி ரேவதி கழுத்தில் இருந்த கவரிங் செயினை அறுத்து கொண்டு தப்பித்து ஓடி விட்டனராம்.

  ரேவதி கொடுத்த புகாரின் அடிப்படையில் ஹரிஹரன் என்கிற சண்டியர், ஹரியை பட்டுக்கோட்டை போலீசார் கைது செய்தனர். மற்ற 2 பேரை தேடிவருகின்றனர்.
  Next Story
  ×