என் மலர்
உள்ளூர் செய்திகள்

பலத்த மழை.
பலத்த மழை
தொண்டியில் நேற்று நள்ளிரவு பலத்த மழை பெய்தது.
தொண்டி
ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக வெயில்வாட்டி வதைத்து வருகிறது. பகல் நேரங்களில அனல்காற்று வீசுவதால் பொதுமக்கள் வெளியே செல்வதை தவிர்த்தனர்.
மேலும் மாணவ-மாணவிகள், வேலைக்கு செல்வோர் கடும் அவதிக்குள்ளானார் கள். இந்த நிலையில் நேற்று நள்ளிரவு தொண்டியில் திடீரென பலத்த மழை பெய்தது. ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பெய்தமழை காரணமாக முக்கிய சாலைகளில் தண்ணீர் தேங்கியது.
குளிர்ந்த காற்றுடன் மழை பெய்ததால் தொண்டியில் வெப்பம் தணிந்து இதமான சூழல் ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் நிம்மதி அடைந்தனர். நேற்றுஇரவு மழை 38.9 மில்லி மீட்டர் தொண்டியில் பதிவாகி உள்ளது.
Next Story






