என் மலர்
உள்ளூர் செய்திகள்

பெண் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து வாட்சாப்பில் வெளியிட்ட ஊழியர்
கடன் வாங்க வந்த பெண் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து வாட்சாப்பில் வெளியிட்ட ஊழியர்
விழுப்புரம் நிதி நிறுவனத்தில் கடன் வாங்க வந்த பெண்ணின் படத்தை ஆபாசமாக சித்தரித்து வெளியிட்ட வாலிபரால் விழுப்புரத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
விழுப்புரம்:
விழுப்புரம் அருகே வளவனூர் ஈஸ்வரன் கோவில் தெருவைச் சேர்ந்த ஒரு பெண் விழுப்புரத்தில் உள்ள ஒரு நிதி நிறுவனத்திற்கு கடன் வாங்குவதற்காக சென்றுள்ளார். தனது ஆதார் அட்டை, பான்கார்டு, புகைபடம் போன்றவற்றை கொடுத்துள்ளார்.
இந்நிலையில் அந்த நிறுவனத்தில் வேலை பார்த்து வரும் ஒரு ஊழியர் அந்தப் பெண் வழங்கிய புகைப்படத்தை வைத்து ஆபாசமாக சித்தரித்து வாட்சாப் குரூப்பில் வெளியிட்டுள்ளார். இதை அறிந்த அந்த பெண் அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து அந்த பெண் வளவனூர் போலீசில் புகார் செய்ததாக கூறப்படுகிறது. வளவனூர் போலீசார் விழுப்புரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு இதுகுறித்து தகவல் தெரிவித்து உள்ளதாக தெரிகிறது. கடன் வாங்க வந்த பெண்ணின் படத்தை ஆபாசமாக சித்தரித்து வெளியிட்ட வாலிபரால் விழுப்புரத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
Next Story






