என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கைது
    X
    கைது

    நூதன முறையில் புகையிலை பொருட்கள் விற்ற 3 பேர் கைது

    நூதன முறையில் புகையிலை பொருட்கள் விற்ற 3 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து ஏராளமான பாக்கெட் உள்ளிட்ட புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.
    பண்ருட்டி:

    தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் குட்கா உள்ளிட்டவைகள் விற்பனை செய்யப்படுவதை கண்காணித்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீசாருக்கு கடலூர் போலீஸ் மாவட்ட சூப்பிரண்டு சக்தி கணேசன் உத்தரவிட்டு இருந்தார்.

    அதன்படி பண்ருட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு சபியுல்லா தலைமையில் பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரன், சப்-இன்ஸ்பெக்டர் புஷ்பராஜ் மற்றும் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். இதன் விளைவாக 100-க்கும் மேற்பட்டோர் மீது வழக்குப்பதிவு செய்து ஏராளமான தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.

    இதற்கிடையில் நேற்று நூதன முறையில் நாப்கின் பேடில் மறைத்து வைத்து விற்பனை செய்த சுரேஷ் (40) அய்யப்பன் (38), வடக்குபாளையம்குமார் (40)ஆகிய 3 பேரை கைது செய்து அவர்களிடமிருந்து ஏராளமான பாக்கெட் உள்ளிட்ட புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். கைதான 3 பேரும் பண்ருட்டி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டனர்.

    Next Story
    ×