என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மின் தடை
    X
    மின் தடை

    புவனகிரி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் தொடர் மின்வெட்டு

    மின்வெட்டை முற்றிலும் தவிர்க்க அரசு சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என்று பள்ளி மாணவ மாணவிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
    புவனகிரி:

    புவனகிரி மற்றும் புவனகிரியை சுற்றியுள்ள கிராமங்களில் தொடர் மின்வெட்டு பள்ளி மாணவ மாணவிகள் வரும் பொதுத்தேர்வுக்கு படிக்க முடியாமல் அவதி.

    தற்பொழுது பள்ளி மாணவ மாணவிகளுக்கு +1, +2 செய்முறை தேர்வு வரும் ஏப்ரல் 25ஆம் தேதி திங்கள்கிழமை மாவட்டம் முழுவதும் துவங்க உள்ளதால் மே 3ஆம் தேதிக்கு +2பொதுத் தேர்வு துவங்க இருப்பதாலும் மாணவ-மாணவிகள் தேர்வுக்கு தயாராவதற்கு சிரமமாக உள்ளது இந்த மின்வெட்டை முற்றிலும் தவிர்க்க அரசு சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என்று பள்ளி மாணவ மாணவிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    நேற்று கடலூரில் மாவட்ட ஆட்சியர் கூட்டத்தில் அனைத்து விவசாயிகளும் மின்வெட்டு நீக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியரை முற்றுகையிட்டு தர்ணாவில் ஈடுபட்டனர்.

    Next Story
    ×