என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.
மாநகராட்சி பள்ளிக்கு குடியிருப்போர் சங்கம் சார்பில் ரூ.20 லட்சம் நிதி
திரு.வி.க., நகர் குடியிருப்போர் சங்கம், எல்.ஐ.சி., நகர் குடியிருப்போர் நலச்சங்கம் ஆகியன இணைந்து ரூ.20 லட்சம் பொதுமக்கள் பங்களிப்பாக வழங்கியுள்ளன.
திருப்பூர்:
திருப்பூர் மாநகராட்சி பகுதியில், ‘நமக்கு நாமே’ திட்டத்தில், தன்னார்வலர்கள், பொது நல அமைப்பினர் பங்களிப்புடன் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அவ்வகையில் காலேஜ் ரோடு, திரு.வி.க., நகரில் உள்ள மாநகராட்சி நடுநிலைப்பள்ளி உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்படுகிறது.
இதற்காக, திரு.வி.க., நகர் குடியிருப்போர் சங்கம், எல்.ஐ.சி., நகர் குடியிருப்போர் நலச்சங்கம் ஆகியன இணைந்து ரூ.20 லட்சம் பொதுமக்கள் பங்களிப்பாக வழங்கியுள்ளன.
இதற்கான காசோலையை மெஜஸ்டிக் கந்தசாமி மற்றும் சங்க நிர்வாகிகள், மேயர் தினேஷ்குமாரிடம் வழங்கினர்.
துணை மேயர் பாலசுப்ரமணியம் மற்றும் பலர் உடனிருந்தார். குடியிருப்போர் சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களுக்கு மாநகராட்சி நிர்வாகம் சார்பில் மேயர் நன்றி தெரிவித்தார்.
Next Story






