என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்
தக்கலை அருகே மோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதி வாலிபர் பலி
தக்கலை அருகே மோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதி வாலிபர் பலியானார்.
கன்னியாகுமரி:
தக்கலை அருகே பரையன் விளை கோடியூர் பகுதியை சேர்ந்தவர் தேவராஜ். இவரது மகன் யூஜின் ஜெபராஜ் (வயது 28). என்ஜினீயரிங் பட்டதாரி.
இவர் நேற்று இரவு தனது சகோதரியின் குழந்தைக்கு உணவு வாங்குவதற்காக தனது மோட்டார் சைக்கிளில் அழகியமண்டபம் வந்தார். பின்னர் வீட்டிற்கு திரும்பி செல்லும்போது முளகுமூடு பகுதியில் இவரது மோட்டார் சைக்கிள் மீது எதிரே திருவனந்தபுரத்தில் இருந்து நாகர்கோவில் வந்த அரசு பஸ் மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்டார். உடனே அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு தக்கலை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி யூஜின் ஜெபராஜ் பரிதாப மாக இறந்தார்.
இதுகுறித்து அவரது தந்தை தேவராஜ் தக்கலை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் சுதேசன் வழக்கு பதிவு செய்து அரசு பஸ் டிரைவர் தொழிக்கோடு பகுதியை சேர்ந்த நெல்சன் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Next Story






