search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    தாராபுரம் மாரியம்மன் கோவில் திருவிழாவில் ரூ.63ஆயிரம் உண்டியல் காணிக்கை

    திருவிழாவின்போது உண்டியலில் பக்தர்கள் செலுத்திய காணிக்கை இந்து அறநிலைத்துறை ஆய்வாளர் வடிவுக்கரசி உத்தரவின்பேரில் உண்டியல் சீல் அகற்றப்பட்டு எண்ணப்பட்டது.
    தாராபுரம்:

    தாராபுரம் மாரியம்மன் கோவில் திருவிழா கடந்த மாதம் 22-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது, திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக கடந்த 6-ந் தேதி முதல் 9-ந் தேதி வரை பக்தர்கள் அலகு குத்துதல், பூவோடு எடுத்தல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றது.  

    விழாவின் போது உள்ளூர் மட்டுமில்லாது வெளிமாவட்டங்களில் திருவிழாவிற்கு வருகை தரும் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் உண்டியலில் காணிக்கை செலுத்துவதற்காக கோவில் நிர்வாகம் சார்பில் நிரந்தர உண்டியல் தவிர அத்துடன் 3 தற்காலிக உண்டியல் வைக்கப்பட்டது.

    கோவில் திருவிழா கடந்த 19-ந் தேதி நிறைவடைந்தது. திருவிழாவின்போது உண்டியலில் பக்தர்கள் செலுத்திய காணிக்கை இந்து அறநிலைத்துறை ஆய்வாளர் வடிவுக்கரசி உத்தரவின்பேரில் உண்டியல் சீல் அகற்றப்பட்டு எண்ணப்பட்டது. 

    இந்து அறநிலையத்துறை ஆய்வாளர் தலைமையில் கோவில் பூசாரிகள் உண்டியல் காணிக்கையை எண்ணினர். அதில் 120 மில்லி கிராம் தங்கம், 180 கிராம் வெள்ளி அத்துடன் ரூ. 63 ஆயிரம் இருந்ததாக கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
    Next Story
    ×