என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புபடம்.
    X
    கோப்புபடம்.

    பசுமை சாம்பியன் விருது பெறுவோருக்கு ரூ.1லட்சம் பரிசு

    திருப்பூர் தெற்கு பொறியாளர் அலுவலகத்துக்கு உட்பட்ட பகுதியில் தனிநபர், நிறுவனங்கள், இயற்கை ஆர்வலர்கள் 6 பேர் பசுமை விருதுக்கு விண்ணப்பித்துள்ளனர்.
    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டத்தில் திருப்பூர் வடக்கு, தெற்கு தாலுகா, காங்கயம், ஊத்துக்குளி, அவிநாசி தாலுகாவை உள்ளடக்கிய திருப்பூர் தெற்கு மாசு கட்டுப்பாடு வாரிய பொறியாளர் அலுவலகம், பல்லடம், மடத்துக்குளம், உடுமலை, தாராபுரத்தை உள்ளடக்கி தெற்கு பொறியாளர் அலுவலகங்கள் இயங்குகின்றன.

    திருப்பூர் தெற்கு பொறியாளர் அலுவலகத்துக்கு உட்பட்ட பகுதியில் தனிநபர், நிறுவனங்கள், இயற்கை ஆர்வலர்கள் 6 பேர் பசுமை விருதுக்கு விண்ணப்பித்துள்ளனர்.

    தெற்கு பொறியாளர் அலுவலகத்துக்கு உட்பட்ட பகுதியில், பல்லடத்தில் பிளாஸ்டிக் பாட்டிலை மறு சுழற்சி செய்து, ஆடை தயாரிக்கும் ஒரு நிறுவனம் விருதுக்கு விண்ணப்பித்துள்ளது. 

    வரும் 28-ந்தேதி, கலெக்டர் அலுவலக அரங்கில் நடைபெறும் கூட்டத்தில் விருதுக்கு விண்ணப்பித்துள்ளோர் பங்கேற்று சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காக தாங்கள் மேற்கொள்ளும் அம்சங்கள் குறித்து, பட காட்சிகளுடன் விரிவான விளக்கம் அளிக்க உள்ளனர். 

    இதில் சிறந்த 3 பேரை தேர்வு செய்து, மாசுகட்டுப்பாடு வாரிய தலைமைக்கு அனுப்புவர். விருது பெறுவோருக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் ரொக்க பரிசு வழங்கப்பட உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
    Next Story
    ×