என் மலர்
உள்ளூர் செய்திகள்

கைது
மத உணர்வை தூண்டும் வகையில் பேசியதாக புகார்- இந்து மகாசபா மாநில தலைவர் கைது
மத உணர்வை தூண்டும் வகையில் பேசியதாக எழுந்த புகாரையடுத்து இந்து மகாசபா மாநில தலைவர் கைது செய்யப்பட்டார்.
குழித்துறை:
புதுக்கடை அருகே முள்ளுவிளை பத்ரேஷ்வரி அம்மன் கோவில் விழாவில் கடந்த 17-ந்தேதி இந்து மகாசபா மாநில தலைவர் த.பாலசுப்பிரமணியன் கலந்து கொண்டார்.
பின்னர் புதுக்கடை அருகே காப்புக்காடு பகுதியில் நடந்த நிர்வாகிகள் கூட்டத்தில் த. பாலசுப்பிரமணியன் கலந்துகொண்டு பேசினார். அப்போது மத உணர்வை தூண்டும் வகையில் பேசியதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது.
இதுகுறித்து தக்கலை டி.எஸ்.பி. கணேசன், புதுக்கடை போலீசில் புகார் செய்தார். புகாரின்பேரில் போலீசார் த.பாலசுப்பிரமணியன் மீது வழக்குப்பதிவு செய்தனர். இதையடுத்து தனிப்படை போலீசார் இன்று காலை ஈத்தாமொழி போலீஸ் சரகத்திற்குட்பட்ட பகுதியில் உள்ள மாநில தலைவர் த.பாலசுப்பிரமணியன் வீட்டிற்கு சென்றனர்.
வீட்டில் இருந்த அவரை போலீசார் கைது செய்து புதுக்கடை போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். அவரிடம் விசாரணை நடத்திய போலீசார் அவரை மருத்துவ பரிசோதனைக்காக குழித்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
இதுபற்றி தகவல் அறிந்த இந்து மகாசபா நிர்வாகிகள் குழித்துறை அரசு ஆஸ்பத்திரி முன்பு திரண்டனர். பின்னர் நிர்வாகிகள் ஆஸ்பத்திரிக்குள் செல்ல முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினார்கள். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இந்து மகாசபா மாநில இளை ஞரணி செயலாளர் துரைராஜ் தலைமையில் நிர்வாகிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. இதை தொடர்ந்து இந்து மகாசபா மாநில தலைவர் த.பாலசுப் பிரமணியனை கோர்ட்டில் ஆஜர்படுத்த அழைத்துச் சென்றனர்.

Next Story