என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புபடம்.
    X
    கோப்புபடம்.

    ஊரக வேலை திட்டத்தில் குறைகள் இருந்தால் புகார் தெரிவிக்கலாம்

    வேலை உறுதித் திட்டத்தின் குறைகளை நிவர்த்தி செய்வதற்கான மாவட்ட குறை தீர்ப்பு அதிகாரியாக பிரேமலதா பொறுப்பேற்றுள்ளார்.
    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டத்தில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி சட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு உட்பட்டு  மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் குறைகளை நிவர்த்தி செய்வதற்கான மாவட்ட குறை தீர்ப்பு அதிகாரியாக பிரேமலதா பொறுப்பேற்றுள்ளார்.

    அவ்வகையில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தொழிலாளர்களிடம் இருந்து பெறப்படும் புகார்களை பெற்று, 30 நாட்களுக்குள் பரிசீலித்து உரிய நடவடிக்கை மேற்கொள்வார். 

    அதேபோல், பிரச்சினை நடைபெறும் இடத்திலேயே விசாரணை நடத்தப்படும்.

    குறிப்பாக, பணியாளர்களுக்கு ஊதியம் வழங்குதல் தொடர்பான பிரச்சினைகள் உட்பட குறைகள் மீதும் நடவடிக்கைகளை மேற்கொள்வார்.

    எனவே மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் குறைபாடுகள் இருப்பின் நிவர்த்தி செய்திடும் பொருட்டு பொதுமக்கள், குறை தீர்ப்பு அதிகாரியை 9655521233 எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என திருப்பூர் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
    Next Story
    ×