என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அனல்மின் நிலையம்
    X
    அனல்மின் நிலையம்

    வல்லூர் அனல்மின் நிலையத்தில் 500 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு

    கோளாறு ஏற்பட்ட 3-வது அலகை சரி செய்து 500 மெகாவாட் மின் உற்பத்தி செய்யும் பணியில் மின் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

    பொன்னேரி:

    மீஞ்சூர் அடுத்த வல்லூர் அனல் மின் நிலையம் மத்திய மாநில அரசுகள் சார்பில் கடந்த 2012-ம் ஆண்டு தொடங்கப்பட்டது.

    இதில் 3 அலகுகளில் தலா 500 வீதம் தினமும் 1,500 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கப்படுகிறது

    இந்த நிலையில் 3-வது அலகில் கொதிகலன் கசிவு காரணமாக 500 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 1 மற்றும் 2-வது அலகில் தலா 500 வீதம் 1000 மெகாவாட் மின் உற்பத்தி நடைபெற்று வருகிறது.

    கோளாறு ஏற்பட்ட 3-வது அலகை சரி செய்து 500 மெகாவாட் மின் உற்பத்தி செய்யும் பணியில் மின் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

    Next Story
    ×