search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புபடம்.
    X
    கோப்புபடம்.

    திருப்பூர் வழியாக சேலம்- கோவைக்கு பாசஞ்சர் ரெயில் இயக்க கோரிக்கை

    தினமும் வேலை மற்றும் கல்லூரிக்கு சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை இடையே பலர் பயணிக்கின்றனர்.
    திருப்பூர்:

    ஊரடங்கு காலத்தில் ரெயில்வே ஊழியர்கள் பணிகளுக்கு வந்து செல்ல ஏதுவாக சேலத்தில் இருந்து கோவைக்கு பிரத்யேக ரெயில்  தினசரி காலை மற்றும் மாலை இயக்கப்பட்டது. 

    ஈரோடு, திருப்பூர்  ரெயில் நிலையங்களில் இந்த ரெயில் நின்று செல்லும்.தொடக்கத்தில் 6 பெட்டிகளுடன் இயங்கிய இந்த ரெயில் தற்போதும் 3 பெட்டிகளுடன் இயக்கப்படுகிறது.

    இதுகுறித்து ரெயில் பயணிகள் சிலர் கூறியதாவது:-

    தினமும் வேலை மற்றும் கல்லூரிக்கு சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை இடையே பலர் பயணிக்கின்றனர். 

    கடந்த மாதம் முதல் ஈரோடு - கோவை இடையே எக்ஸ்பிரஸ் ரெயில்இயக்கம் துவங்கியுள்ளதால், பெரும்பாலானோர் பயன்பெற்றுள்ளனர்.

    சேலத்தில் இருந்து ஈரோடு, திருப்பூர் வழியாக கோவைக்கு ரெயில் இயக்கினால், ஆயிரக்கணக்கான பயணிகள் தினமும் பயன்பெறுவர். 

    ஊழியருக்கான ரெயில் மட்டும் 3 பெட்டிகளுடன் தினசரி காலை, மாலை இயக்கப்படுகிறது. பாசஞ்சர் ரெயில் இயக்கினால் பயன் உண்டு என்பதை அதிகாரிகள் புரிந்து கொள்ள வேண்டும். 

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
    Next Story
    ×