என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கொண்டை ஊசி வளைவில் குவிலென்ஸ் பொருத்தும் பணி நடந்தது.
    X
    கொண்டை ஊசி வளைவில் குவிலென்ஸ் பொருத்தும் பணி நடந்தது.

    வால்பாறை மலைப்பகுதியில் விபத்தை தவிர்க்க புதிய லென்சுகள் பொருத்தம்

    மலைப்பாதயின் வளைவுகளில் எதிரே வரும் வாகனங்களை கண்டறிந்து செல்ல வசதியாக நெடுஞ்சாலைத்துறை சார்பில் குவியாடி லென்ஸ்கள் பொருத்தப்பட்டிருந்தது.

    ஆனைமலை: 

    பொள்ளாச்சி வால்பாறை சாலை 40 கொண்டை ஊசி வளைவுகளைக் கொண்ட மலை பாதையாகும். வால்பாறை சுற்றுலா தலம் என்பதால் நாள்-தோறும் ஆயிரக்கணக்கானோர் இந்த மலைப் பாதையை பயன்படுத்துகின்றனர். 
     
    வளைந்து நெளிந்து போகக்கூடிய இந்த மலைப்-பாதயின் வளைவுகளில் எதிரே வரும் வாகனங்களை கண்டறிந்து செல்ல வசதி-யாக நெடுஞ்சாலைத்துறை சார்பில் குவியாடி லென்ஸ்கள் பொருத்தப்பட்டிருந்தது. இந்த வழியாக வரும் சுற்றுலா பயணிகள் சிலர் மலைப்பாதையின் வளைவுகளில் வைத்திருந்த குவியாடி லென்ஸ்களை சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது. 

    இதனால் வளைவுகளில் வரும் வாகனங்கள் மேலிருந்து எதிரே வரும் வாகனங்களை கண்டறிந்து செல்லமுடியாமல் பல நேரங்களில் விபத்துக்கள் ஏற்பட்டு வந்தது. இது தொடர்ந்து வாகன ஓட்டிகள் வைத்த கோரிக்கையை ஏற்று பொள்ளாச்சி வால்பாறை சாலையில் சேதமடைந்த நிலையில் இருந்த குவியாடி லென்ஸ்களை அகற்றி புதிய லென்ஸ்களை பொருத்தும் பணியில் நெடுஞ்சாலைத்துறை ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
     
    இதுவரை பத்துக்கும் மேற்பட்ட புதிய லென்சுகள் பொருத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர் மேலும் வாகன விபத்து ஏற்படக்கூடாது என்பதற்காக இந்த குவியாடி லென்ஸ்கள் பொருத்தப்பட்டு இருப்பதாகவும் இதை அவ்வழியாக செல்லும் சிலர் அடிக்கடி சேதப்படுத்துவதாகவும் வாகன ஓட்டிகளின் உயிர் காக்கவே இந்த லென்ஸ் பொருத்தப்பட்டு உள்ளது என்பதை அவ்வழியாக வரும் அனைத்து சுற்றுலா பயணி-களும் உணர வேண்டும் என்றும் கோரிக்கை தெரிவித்தனர். 
    Next Story
    ×