என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்பு காட்சி.
    X
    கோப்பு காட்சி.

    தக்கலை அருகே மோட்டார் சைக்கிள் மோதி முதியவர் பலி

    தக்கலை அருகே மோட்டார் சைக்கிள் மோதி முதியவர் பலி
    தக்கலை, ஏப்.22-

    தக்கலை அருகே வெள்ளி-கோடு வடக்கருவிளை பகுதியை சேர்ந்தவர் ஆன்றனி (வயது 68) கூலி தொழிலாளி.இவர் தினமும் வெள்ளிகோடு சந்திப்பில் காலையில் டீ குடிக்க செல்வது வழக்கம்.

    இந்த நிலையில் இன்று காலை வீட்டில் இருந்து டீ குடிக்க வெள்ளிகோடு சந்திப்பில்   ரோட்டை கடந்தார். அப்போது வேகமாக வந்த  அடையாளம் தெரியாத மோட்டார் சைக்கிள் இவர் மீது மோதியது. இதில்  தூக்கி வீசப்பட்ட ஆன்றனி சம்பவ இடத்திலேயே பலியானார். 

    இதுகுறித்து  தக்கலை போலீஸ்  நிலையத்தில் ஆன்றனியின் மனைவி அந்தோணியாள் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்கள்.
    Next Story
    ×