என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புக்காட்சி
    X
    கோப்புக்காட்சி

    கன்னியாகுமரியில் லாட்ஜில் தங்கி இருந்த சுற்றுலா பயணிகளிடம் லேப்டாப், பணம் திருட்டு

    கன்னியாகுமரியில் லாட்ஜில் தங்கி இருந்த சுற்றுலா பயணிகளிடம் லேப்டாப், பணம் திருட்டு
    கன்னியாகுமரி, ஏப்.22-

    கர்நாடக மாநிலம் பெங்களூரைச் சேர்ந்தவர் சுனில்குமார். இவரது மனைவி சுவேதா (வயது36).இவர் குடும்பத்துடன் கன்னியாகுமரிக்கு சுற்றுலா வந்து இருந்தார்.

    இவர்கள் கன்னியாகுமரி சன்னதி தெருவில் உள்ள ஒரு தங்கும் விடுதியில் அறை எடுத்து தங்கி இருந்தனர். நேற்று காலை அவருடன் வந்தவர்கள் சூரிய உதயம் பார்க்க சென்றுஉள்ளனர். சுவேதா மட்டும் அறையில் குளித்து கொண்டிருந்தார். 

    அப்போது அறைக்குள் நுழைந்த மர்ம நபர் அங்குஇருந்த லேப்டாப் ரூ.6 ஆயிரம் ரொக்க பணம் மற்றும் ஏ.டி.எம். கார்டுகளை திருடிச் சென்று உள்ளார். 

    இதுகுறித்து சுவேதா கன்னியாகுமரி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் கன்னியாகுமரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கதிரேசன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
    Next Story
    ×