என் மலர்
உள்ளூர் செய்திகள்

கார்த்திக்ராஜா
வாலிபர் தற்கொலை
திருமங்கலம் அருகே வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
திருமங்கலம்
மதுரை பரவை அருகே உள்ள சத்தியமூர்த்திநகர் காளியம்மன்கோவிலை சேர்ந்த நட்சத்திரம் மகன் கார்த்திக்ராஜா (வயது 28). இவர் எருமலம்பட்டி தனியார் பைப்கம்பெனியில் டிரைவராக பணிபுரிந்தார். இவருக்கு திருமணமாகவில்லை.
இவருக்கு கடன்பிரச்சினை இருப்பதாக கூறப்படுகிறது. நேற்று இரவு வேலை பார்க்கும் பைப்கம்பெனி பின்புறமுள்ள வேப்பமரத்தில் கார்த்திக் ராஜா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து சிந்துபட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். கார்த்திக்ராஜா உடலை பிரேத பரிசோதனைக்காக திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
Next Story






