என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    2 பேர் கைது
    X
    2 பேர் கைது

    கோஷ்டி மோதலில் ஈடுபட்ட 2 பேர் கைது

    மதுரை அருகே கோஷ்டி மோதலில் ஈடுபட்ட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
    மதுரை

    மதுரை நெல்பேட்டை சுங்கம் பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்த மகபூப்ஜான் மகன் முகமது இஸ்மாயில். சம்பவத்தன்று இரவு இவர் கீழவெளிவீதி ஏவி பாலம் பகுதியில் நடந்து சென்றார். அப்போது நெல்பேட்டை காயிதேமில்லத் தெரு பீர் ஒளி மகன் யாசர் அராபத் (21) கூட்டாளிகளுடன் வந்தார். அவர் ‘உனது உறவினர் தமீம் அன்சாரி என்னிடம் வம்பு வளர்த்துக் கொண்டு இருக்கிறான். நீ அவனுக்கு ஆதரவாக இருக்கிறாயா?” என்று கேட்டு அடித்து உதைத்தனர். இஸ்மாயிலை அந்தகும்பல் கத்தியால் குத்திக்கொல்ல முயன்றது.

    முகமது இஸ்மாயில் தாக்கப்பட்டதை அறிந்த தமீம்அன்சாரி கூட்டாளிகளுடன் வைகை தென்கரை சந்திப்புக்கு வந்தார். அங்கு நின்று கொண்டிருந்த யாசர் அராபத் பரத்துக்கு அடி&உதை விழுந்தது. அவரும் பயங்கர ஆயுதங் களால் தாக்கினார். இதில் தமீம் அன்சாரிக்கு படுகாயம் ஏற்பட்டது. அவரை போலீசார் மீட்டு சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிரசிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
    முகமது இஸ்மாயில் கொடுத்த புகாரின் அடிப் படையில் விளக்குத்தூண் போலீசார் யாசர் அராபத்தை கைது செய்தனர். இதே வழக்கில் யாசர் அராபத் கொடுத்த புகாரின் அடிப்படையில் தமீம் அன்சாரி யைகைது செய்தனர். தப்பி ஓடிய உதுமான் என்ற உமர், சொர்ணம் என்ற ரியாஸ் ஆகியோரை தேடி வருகின்றனர்.

    இதற்கிடையே புதூர் மைதீன்மீரான் மகன் அப்பாஸ்மந்திரி (21) விளக்குத்தூண் போலீசில், “நான் கீழமாரட்வீதி டீக்கடை அருகே நடந்து சென்றபோது அங்குவந்த யாசர் அராபத் கத்தியை காட்டி மிரட்டி ரூ. 3 ஆயிரத்தை பறித்து சென்ற தாக புகார் கொடுத்தார். இந்தவழக்கிலும் போலீசார் யாசர் அராபத்தை கைது செய்தனர்.
    Next Story
    ×