என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அண்ணாமலை பல்கலைக்கழக வேளாண்புலம் சார்பில் முதலாம் ஆண்டு தொடக்க விழா
    X
    அண்ணாமலை பல்கலைக்கழக வேளாண்புலம் சார்பில் முதலாம் ஆண்டு தொடக்க விழா

    அண்ணாமலை பல்கலைக்கழக வேளாண்புலம் சார்பில் முதலாம் ஆண்டு தொடக்க விழா

    அண்ணாமலை பல்கலைக்கழக வேளாண்புலம் சார்பில் நடைபெற்ற முதலாம் ஆண்டு தொடக்க விழாவில் அதிக மதிப்பெண்கள் பெற்ற இளநிலை வேளாண் மாணவர்களுக்கு பாராட்டு வழங்கப்பட்டது.
    சிதம்பரம்:

    அண்ணாமலை பல்கலைக்கழக வேளாண்புலம் சார்பில் முதலாம் ஆண்டு தொடக்க விழா 20210- 2022 அண்ணாமலை பல்கலைக்கழக வேளாண் புலத்தின் சார்பில் முதலாம் ஆண்டு இளநிலை (வேளாண்மை மற்றும் தோட்டக்கலைப் பாடப்பிரிவுகள்) மற்றும் பட்டயப் படிப்புகள் தொடக்க விழா சாஸ்திரி அரங்கில் நடைபெற்றது. முதலாம் ஆண்டு ஒருங்கிணைப்பாளர் சுதின்ராஜ் வரவேற்றார். வேளாண் புல முதல்வர் முனைவர் சுந்தர வரதராஜன் தலைமை தாங்கி பேசினார்.

    விழாவில் விழுப்புரம் சரக போலீஸ் டி.ஐ.ஜி. பாண்டியன் மற்றும் புதுவை வேளாண் மற்றும் விவசாயிகள் நல வாழ்வு இயக்குநர் முனைவர்.ராமகிருஷ்ணன், பால் காந்தி ஆகியோர் வாழ்த்தி பேசினர். இவ்விழாவில் புதிய மாணவர்கள் வேளாண் உறுதிமொழி ஏற்கும் நிகழ்வும் நடைபெற்றது.

    அதிக மதிப்பெண்கள் பெற்ற இளநிலை வேளாண் மாணவர்களுக்கு பாராட்டும் வழங்கப்பட்டது. முடிவில் மக்கள் தொடர்பு அதிகாரி ரத்தின சம்பத், மற்றும் துணைவேந்தரின் நேர்முக செயலர் முனைவர் பாக்கியராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் இறுதியில் பட்டயப்படிப்பு ஒருங்கிணைப்பாளர் முனைவர் முத்துக்குமரன் நன்றி கூறினார்.

    Next Story
    ×