என் மலர்
உள்ளூர் செய்திகள்

கொத்தனார் கைது
சிறுமிக்கு பாலியல் தொல்லை
மதுரை அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கொத்தனார் கைது செய்யப்பட்டார்.
மதுரை
மதுரை மேலப்பொன்னகரம் பகுதியில் 8வயது சிறுமிக்கு 57வயது முதியவர் பாலியல் தொல்லை கொடுத்து வருவதாக மாநகர போலீஸ் நிலைய கட்டுப் பாட்டு அறை எண் 1098-க்கு அவசர அழைப்பு வந்தது. உடனே இதில் சம்பந்தப் பட்ட குற்றவாளிகளை உடனடியாக கைதுசெய்ய வேண்டும் என்று மாநகர போலீஸ் கமிஷனர் செந்தில் குமார் உத்தரவிட்டார்.
அதன்படி மாநகர தெற்கு துணை கமிஷனர் தங்கதுரை மேற்பார்வையில், உதவி கமிஷனர் அக்பர்கான் ஆலோசனை பேரில், மதுரை தெற்கு அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் விமலா அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள் சம்பவஇடத்துக்கு சென்று சிறுமியின் தாயிடம் விசாரித்தனர்.
அப்போது அவர் கூறியதாவது:&
எனது கணவர் ஹோட்டல் வேலைக்கு செல்கிறார். நான் மாட்டுத்தாவணியில் உள்ள கடையில் வேலை பார்க்கிறேன். நாங்கள் காலை 9மணிக்கு வேலைக்கு போனால் இரவு வீடு திரும்ப 9 மணி ஆகிவிடும். எங்களுக்கு 8வயது மகள் உள்பட 2பிள்ளைகள் உள்ளனர்.
என் மகள் 4ம் வகுப்பு படித்து வருகிறார். நாங்கள் குடியிருக்கும் அதே பகுதியில் கட்டிட வேலைபார்க்கும் முருகேசன் (வயது 57) என்பவர் வசித்து வருகிறார். சம்பவத்தன்று நாங்கள் வீட்டில் இல்லாதபோது முருகேசன் வீட்டுக்குள் புகுந்து என் மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
இவ்வாறு அவர் கூறிஉள்ளார்.
அதன்பேரில் முருகேசனிடம் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது அவர் சிறுமியிடம் பாலியல் தொல்லையில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டார். இதையடுத்து மதுரை தெற்கு அனைத்து மகளிர் போலீசார் அவரை கைது செய்தனர்.
Next Story






