என் மலர்
உள்ளூர் செய்திகள்

பணம் மோசடி.
திருமணம் செய்வதாக கூறி வாலிபரிடம் பணம் மோசடி
திருமணம் செய்வதாக கூறி வாலிபரிடம் பணம் மோசடி செய்த பெண் குடும்பத்தினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
மதுரை
மதுரை கோச்சடை சாந்தி சதன் குடியிருப்பை சேர்ந்தவர் கார்த்திக் (வயது 42). இவர் எஸ்.எஸ்.காலனி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதில், நான் 2-வது திருமணத்துக்கு பெண் பார்த்துக்கொண்டு இருந்தேன்.
புரோக்கர் சுப்புராஜ் என்பவர் மூலம் அனிதாவை பார்த்தோம். எனக்கு அவரை பிடித்து இருந்தது. அவரது குடும்பத் தாரிடம் சம்மதம் கேட்டேன். அவர்களும் ஒப்புக்கொண்டனர்.
அனிதா குடும்பத்தினர் என்னிடம் பல்வேறு தவணைகளில் ரூ. 7லட்சத்து 30ஆயிரத்தை பெற்றுக் கொண்டனர். நான் திருமண ஏற்பாடுகளை செய்து வந்தேன். தற்போது அனிதா குடும்பத்தினர் திருமணத் துக்கு மறுத்து வருகின்றனர். போலீசார் இது தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என்று கூறப்பட்டு உள்ளது.
இதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அனிதா, அவரது தந்தை பெரியசாமி, தாய் கோமதி, சகோதரி வெண்மதி, புரோக்கர் சுப்பு ராஜன் ஆகியோரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






