என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்புப்படம்.
விஷம் குடித்து பெண் தற்கொலை
திருவையாறு அருகே விஷம் குடித்து பெண் தற்கொலை செய்துகொண்டார்.
திருவையாறு:
திருவையாறு அருகே நடுக்காவேரி பாசார் மாதாகோவில் தெருவைச் சேர்ந்தவர் ராஜா (வயது 44). இவரது மனைவி கிருஷ்ணவேணி (37). இவர்களுக்கு 3 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில்
கிருஷ்ணவேணி அடிக்கடி வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். சம்பவத்தன்று வயிற்றுவலி அதிகமானதால், வீட்டிலிருந்த எலிமருந்தை எடுத்து குடித்து மயங்கி விழுந்து விட்டார். உடனே, 108 ஆம்புலன்சு
மூலம் தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தார். இருப்பினும் சிகிச்சை பலனளிக்காமல் கிருஷ்ணவேணி இறந்து விட்டார். இதுகுறித்து
அவரது கணவர் ராஜா கொடுத்த புகாரின்பேரில் நடுக்காவேரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஞானமுருகன் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.
Next Story