என் மலர்
உள்ளூர் செய்திகள்

கைது
ஆபரேசன் கஞ்சா வேட்டை- திருவள்ளூர் மாவட்டத்தில் 55 பேர் கைது
கஞ்சா வேட்டையில் கடந்த மாதம் 28-ந் தேதி முதல் இதுவரை 55 பேர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்யப்பட்டு உள்ளனர்.
திருவள்ளூர்:
தமிழகத்தில் தடைசெய்யப்பட்ட கஞ்சா, புகையிலை பொருட்களை முழுவதும் ஒழிக்க டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். அவரது உத்தரவுப்படி தமிழகம் முழுவதும் ஆபரேசன் கஞ்சாவேட்டை என்ற பெயரில் அதிரடி சோதனை நடந்து வருகிறது.
திருவள்ளூர் மாவட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு வருண் குமார் மேற்பார்வையில் தனிப்படை போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு கஞ்சா, புகையிலை கடத்தல் வியாபாரிகள், விற்பனை செய்பவர்களை கைது செய்து வருகின்றனர்.
திருத்தணி, கவரப்பேட்டை, ஊத்துக்கோட்டை, பாதிரிவேடு, ஆரம்பாக்கம், திருவள்ளூர் ஆகிய பகுதியில் உள்ள பள்ளி, கல்லூரி, ரெயில் நிலையம், பஸ் நிலையம் உள்ளிட்ட பகுதியில் ஆபரேஷன் கஞ்சா வேட்டை தொடர்ந்து தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்த கஞ்சா வேட்டையில் கடந்த மாதம் 28-ந் தேதி முதல் இதுவரை 55 பேர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்யப்பட்டு உள்ளனர். அவர்களிடம் இருந்து 205 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.
கஞ்சா, புகையிலை கடத்தல், வியாபாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வருண்குமார் எச்சரிக்கை விடுத்து உள்ளார்.

Next Story