என் மலர்
உள்ளூர் செய்திகள்

வேலைவாய்ப்பு முகாம்.
வேலைவாய்ப்பு முகாம்
ராமநாதபுரத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நாளை நடக்கிறது
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் வாரந்தோறும் நடத்தப்படும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நாளை (வெள்ளிக்கிழமை) ராமநாதபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெற உள்ளது.
இந்த முகாமில் கலந்துகொள்ள விருப்பமுள்ளவர்கள் தங்களின் சுய விபரங்கள் அடங்கிய விண்ணப்பம், அனைத்து அசல் கல்விச்சான்றுகள், ஆதார் அட்டை, குடும்ப அடையாளஅட்டை மற்றும் புகைப்படத்துடன் நாளை காலை 10 மணிக்கு ராமநாதபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்திற்கு நேரில் வந்து கலந்துகொண்டு பயன்பெறலாம்.
மேற்கண்ட தகவலை ராமநாதபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் மதுக்குமார் தெரிவித்துள்ளார்.
Next Story






