என் மலர்
உள்ளூர் செய்திகள்

பூப்பல்லக்கில் வலம்வந்த கள்ளழகர்.
கோவிலை அடைந்தார் கள்ளழகர்
பரமக்குடியில் சித்திரை திருவிழா நிறைவுபெற்றதை தொடர்ந்து கள்ளழகர் கோவிலை சென்றடைந்தார்.
பரமக்குடி
பரமக்குடி சுந்தரராஜப் பெருமாள் கோவிலின் சித்திரைத்திருவிழா கடந்த 11ந்தேதி காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது. 14ந்தேதி பூப்பல்லக்கில் சுந்தரராஜபெருமாள் நீலவண்ண பட்டுத்தி கள்ளழகர் திருக்கோலத்துடன் வைகையாற்றில் இறங்கினார்.
வைகையாற்றில் எழுந்தருளிய கள்ளழகர் பல்வேறு மண்டகப்படிகளுக்கு சென்று பக்தர்களுக்கு காட்சியளித்தார். பின்பு மேலச்சத்திரத்தில் அமைந்துள்ள தல்லாகுளம் மண்டகப்படியில் கள்ளழகர் கோலத்தில் குதிரை வாகனத்தில் எழுந்தருளினார்.
தொடர்ந்து பல்வேறு மண்டகப்படிகளில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்த பெருமாள், வண்டி யூர் என்னும் காக்காத்தோப்பு மண்டகப்படிக்கு சென்றடைந்தார். அதனை தொடர்ந்து வைகையாற்றில் அமைந்துள்ள வாணிய உறவின் முறையார் மண்டகப்படியில் எழுந்தருளும் பெருமாளுக்கு விடிய விடிய தசாவதார நிகழ்ச்சிகள் நடைபெற்றது. பின்பு பல்வேறு மண்டகப்படிகளில் பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
நேற்று சுந்தரராஜப்பெருமாள் மீண்டும் கள்ளழகர் திருக்கோலத்துடன் வண்ண மலர்களால் அலங் கரிக்கப்பட்ட பூப்பல்லக்கில் நகருக்குள் எழுந்தருளி முக்கிய வீதிகளில் வலம் வந்தார். மாலையில் அவர் கோவிலை சென்றடைந்தார். அதனைத்தொடர்ந்து கண்ணாடிசேவை நடைபெற்றது.
திருவிழா ஏற்பாடுகளை சுந்தரராஜபெருமாள் கோவில் மேனேஜிங் டிரஸ்டி நாகநாதன் தலைமையில் பாலமுருகன், நாகநாதன், கோவிந்தன், முரளிதரன் ஆகிய டிரஸ்டிகள் செய்தனர்.
Next Story






