search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மார்க்கெட்டில் வெங்காயத்தை தரம் பிரிக்கும் தொழிலாளர்கள்
    X
    மார்க்கெட்டில் வெங்காயத்தை தரம் பிரிக்கும் தொழிலாளர்கள்

    வெங்காயம் விலை தொடர் சரிவால் விவசாயிகள் கவலை

    திண்டுக்கல் மார்க்கெட்டில் வெங்காயம் விலை தொடர் சரிவால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்
    திண்டுக்கல்:

    தாடிக்கொம்பு சாலையில் உள்ள வெங்காய மார்க்கெட்டுக்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் விவசாயிகளால் வெங்காயம் கொண்டு வரப்படுகிறது. இது தவிர பல்லாரி மற்றும் முதல் தர வெங்காயம் வெளிமாநிலங்களில் இருந்து வருகிறது.

    இங்கிருந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந்து, இலங்கை போன்ற வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. கடந்த 1 மாதத்துக்கும் மேலாகவே வெங்காயத்தின் விலை தொடர்ந்து சரிந்து வருகிறது.உள்ளூர் வரத்து அதிகரிப்பின் காரணமாகவும், வெளிநாடுகளுக்கு அனுப்ப முடியாததாலும் இந்த விலை நிலவுவதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

    இன்று குஜிலியம்பாறை, எரியோடு, வடமதுரை, அய்யலூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து மட்டும் 3000 மூடை வெங்காயம் வந்து இறங்கியுள்ளது. 1 கிலோ ரூ.10க்கும், முதல் தரம் நயம் வெங்காயம் ரூ.20க்கும் விற்பனையாகிறது.

    இதே போல் பல்லாரி கிலோ ரூ.15க்கு விற்கப்படுகிறது. தொடர்ந்து இந்த விலை சரிவால் உள்ளூர் விவசாயிகள் கடுமையான நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர்.

    இது குறித்து விவசாயிகள் தெரிவிக்கையில், பொதுவாக மழை காலங்களில் வெங்காயத்துக்கு அழுகல்நோய் ஏற்பட்டு போதிய விலை கிடைக்காத நிலை ஏற்படும். ஆனால் கோடை காலத்திலும் வெங்காயம் பயிரிட்ட விவசாயிகள் கடும் நஷ்டத்தை சந்தித்துள்ளனர்.

    கடந்த ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் கிலோ ரூ.60க்கு விற்கப்பட்ட வெங்காயம் தற்போது 4ல் ஒரு பகுதியாக விலை குறைந்துள்ளது.

    இது வெங்காயம் சாகுபடி செய்துள்ள விவசாயிகளுக்கு பேரிடியாக உள்ளது. எனவே அரசு போதிய நிவாரணம் அல்லது ஏற்றுமதிக்கான வாய்ப்பை உருவாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.
    Next Story
    ×