என் மலர்
உள்ளூர் செய்திகள்

அபராதம்
தாம்பரத்தில் 4 டன் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்- வியாபாரிகளுக்கு ரூ.1 லட்சம் அபராதம்
தாம்பரத்தில் 4 டன் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்த வியாபாரிகளுக்கு ரூ.1 லட்சத்து 12 ஆயிரத்து 800அபராதம் விதித்தனர்.
தாம்பரம்:
தாம்பரம் மாநகராட்சி மேயர் வசந்தகுமாரி கமலக்கண்ணன், துணைமேயர் காமராஜ், மாநகராட்சி ஆணையர் டாக்டர்.எம்.இளங்கோவன் ஆகியோர் உத்தரவின்பேரில் தாம்பரம் மாநகராட்சி அதிகாரிகள் தாம்பரம் மார்க்கெட் பகுதி, ராஜாஜி சாலை, குரோம்பேட்டை, ராதாநகர், ஸ்டேஷன் ரோடு, சி.எல்.சி ரோடு, ஆர்.பி ரோடு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கடைகளில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது தடைசெய்யப்பட்ட 4 டன் பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்தனர்.மேலும் பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்த வியாபாரிகளுக்கு ரூ.1 லட்சத்து 12 ஆயிரத்து 800அபராதம் விதித்தனர்.
Next Story






