என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கைது
    X
    கைது

    பிளஸ்-1 மாணவியை மிரட்டி கற்பழித்த 63 வயது முதியவர் கைது- கர்ப்பமாகியதால் சிக்கினார்

    திருவள்ளூர் அருகே ஒரு ஆண்டாக பிளஸ்-1 மாணவியை மிரட்டி கற்பழித்த முதியவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திருவள்ளூர்:

    திருவள்ளூரை அடுத்த செஞ்சி கிராமம், மேலாண்டை தெருவை சேர்ந்தவர் பரசுராமன் (வயது63). விவசாயி. இவருக்கு சொந்தமாக அதே பகுதியில் கொய்யாத்தோப்பு உள்ளது.

    அதே கிராமத்தை சேர்ந்த 11 -ம் வகுப்பு படித்து வரும் 16 வயது சிறுமி பரசுராமனின் விவசாய நிலத்தில் உள்ள பூச்செடிகளில் பூ பறிக்கவும், கொய்யாக்காய் பறிக்கும் வேலைக்கும் அவ்வப்போது செல்வது வழக்கம். மாணவியின் தந்தை ஏற்கனவே இறந்து விட்டார். அவர் தாயுடன் வசித்து வந்தார். இந்த நிலையில் கடந்த ஆண்டு மாணவி கொய்யாக்காய் பறிக்க வந்தார். அப்போது அங்கிருந்த பரசுராமன், மாணவியிடம் ஆசை வார்த்தை கூறி அங்கிருந்த கொய்யாத்தோப்புக்குள் அழைத்துச் சென்று அவரை கற்பழித்தார். மேலும் இதுபற்றி யாரிடமும் சொல்லக்கூடாது என்று மாணவியை மிரட்டினார். இதனால் பயந்து போன மாணவி தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து யாரிடமும் கூறாமல் இருந்தார்.

    இதனை சாதகமாக பயன்படுத்திய முதியவர் பரசுராமன் அவ்வப்போது மாணவியை மிரட்டி கடந்த ஒரு ஆண்டாக பலமுறை உல்லாசமாக இருந்து வந்துள்ளார். இதற்கிடையே மாணவி கர்ப்பம் ஆனார். இதனால் இதற்கு மேலும் மறைக்க முடியாது என்பதால் மாணவி தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து தனது தாயிடம் கூறி கதறி அழுதார்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவியின் தாய் இதுகுறித்து திருவள்ளூரில் உள்ள அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். துணை போலீஸ் சூப்பிரண்டு சந்திரதாசன் உத்தரவின்பேரில் இன்ஸ்பெக்டர் லோகேஸ்வரி வழக்குப்பதிவு செய்து மாணவியை சீரழித்த பரசுராமனை கைது செய்தார். பின்னர் அவரை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மாணவி தற்போது 8 மாத கர்ப்பமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×