என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருத்தணி முருகன் கோவில் பக்தர்கள் காணிக்கை
    X
    திருத்தணி முருகன் கோவில் பக்தர்கள் காணிக்கை

    திருத்தணி முருகன் கோவிலில் ரூ.1 கோடி உண்டியல் வசூல்

    திருத்தணி முருகன் கோவிலில் 910 கிராம் தங்கம், 12 ஆயிரத்து 503 கிராம் வெள்ளியும் காணிக்கையாக கிடைத்ததாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
    திருத்தணி:

    திருத்தணி முருகன் கோவில் அறுபடை வீடுகளில் ஐந்தாம் படை வீடாக திகழ்கிறது.

    இங்கு தமிழகம் மட்டுமின்றி, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்து தினந்தோறும் ஏராளமானோர் வந்து சாமி தரிசனம் செய்து செல்கிறார்கள்.

    மலைக்கோவிலில் மூலவர் முருகப்பெருமானை தரிசனம் செய்துவிட்டு பக்தர்கள் காணிக்கையாக உண்டியலில் பணம், நகை செலுத்தி செல்கிறார்கள்.

    இந்த நிலையில் திருத்தணி முருகன் கோவிலில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய உண்டியல் பணத்தை எண்ணும் பணி நடைபெற்றது. மலைக்கோவில் தேவர் மண்டபத்தில் கோயில் இணை ஆணையர், செயல் அலுவலர் பரஞ்ஜோதி, உதவி ஆணையர் ரமணி ஆகியோர் முன்னிலையில் கடந்த 2 நாட்களாக நடைபெற்றது.

    இதில் கடந்த 28 நாட்களில் ஒரு கோடியே 11 லட்சத்து 23 ஆயிரத்து 430 ரூபாய் காணிக்கையாக கிடைத்தது.

    மேலும் 910 கிராம் தங்கம், 12 ஆயிரத்து 503 கிராம் வெள்ளியும் காணிக்கையாக கிடைத்ததாக கோவில் நிர்வாகம் தெரிவித்து உள்ளது.

    Next Story
    ×