என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.
மு.க.ஸ்டாலினுடன் திருப்பூர் ஜவுளித்துறையினர் சந்திப்பு
பஞ்சு மீதான 11 சதவீத இறக்குமதிவரி ரத்து செய்யப்பட வேண்டும் என மத்திய, மாநில அரசுகளிடம் தொடர்ந்து முறையிட்டு வந்தனர்.
திருப்பூர்:
திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க தலைவர் ராஜாசண்முகம், இணை செயலாளர் செந்தில்குமார், கோவை தென்னிந்திய நூற்பாலைகள் சங்க(சைமா) தலைவர் ரவிசாம், இந்திய ஜவுளி தொழில் கூட்டமைப்பு (சிட்டி) தலைவர் ராஜ்குமார், இந்தியன் டெக்ஸ்பிரனர்ஸ் பெடரேசன் அமைப்பு கன்வீனர் பிரபு தாமோதரன் உட்பட ஜவுளி தொழில் துறையினர் சென்னையில் முதல்வர் மு.க.ஸ்டாலின், ஜவுளித்துறை அமைச்சர் காந்தியை நேரில் சந்தித்தனர்.
மத்திய அரசிடம் தொடர்ந்து வலியுறுத்தி பஞ்சு மீதான இறக்குமதி வரியை நீக்க செய்ததற்காக நன்றி தெரிவித்தனர்.
இதுகுறித்து திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க தலைவர் ராஜாசண்முகம் கூறுகையில்,
பஞ்சு மீதான 11 சதவீத இறக்குமதிவரி ரத்து செய்யப்பட வேண்டும் என மத்திய, மாநில அரசுகளிடம் தொடர்ந்து முறையிட்டுவந்தோம். தமிழக அரசும் தொடர்ந்து கடிதங்கள் அனுப்பியதன் பயனாக, மத்திய அரசு பஞ்சு இறக்குமதி வரியை நீக்கியுள்ளது.
இதற்காக முதல்வர், ஜவுளி அமைச்சர், தலைமை செயலரை சந்தித்து நன்றி தெரிவித்துள்ளோம். நாடு முழுவதும் உள்ள பல லட்சம் தொழிலாளர்கள் திருப்பூரில் வசிக்கின்றனர்.
இவர்களுக்காக, குறைந்த வாடகை வீடு கட்டித்தரவேண்டும் என்கிற கோரிக்கையை முன்வைத்துள்ளோம் என்றார்.
Next Story






