என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  மணல்
  X
  மணல்

  விருத்தாசலம் அருகே நாளுக்கு நாள் அதிகரிக்கும் மணல் கடத்தல்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  விருத்தாசலம் அருகே மணல் கடத்தல் சம்பவம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது.
  விருத்தாசலம்:

  கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே கருவேப்பிலங்குறிச்சி பகுதியில் உள்ளது வெள்ளாறு. இந்த வெள்ளாற்றில் இன்று காலை 4 பேர் இரண்டு மாட்டு வண்டியுடன் அனுமதியின்றி மணல் கடத்துவதாக கருவேப்பிலங்குறிச்சி போலீஸ் நிலையத்துக்கு தகவல் வந்தது.

  இந்த தகவலை அடுத்து கருவேப்பிலங்குறிச்சி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றுபோது போலீசார் வருவதை கண்ட நான்கு பேரும் 2 மாட்டு வண்டியையும் 2 மோட்டார் சைக்கிளையும் அப்படியே விட்டு விட்டு தப்பியோடிவிட்டனர்.

  உடனே போலீசார் வழக்கு பதிவு செய்து 2 மாட்டு வண்டி 2 மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்து தப்பியோடிய 4 பேரை வலைவீசி தேடி வருகின்றனர். இதே போன்று மணல் கடத்தல் சம்பவம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது.

  Next Story
  ×