என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  கொள்ளை
  X
  கொள்ளை

  செஞ்சி அருகே உரக்கடையை உடைத்து ரூ.5 லட்சம் கொள்ளை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உரக்கடையில் இருந்த ரூ.5 லட்சம் பணம் கொள்ளையடிக்கப்பட்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
  செஞ்சி:

  விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் விழுப்புரம் சாலையில் உரக்கடை உள்ளது. இந்த கடையில் நேற்று இரவு வியாபாரம் முடிந்ததும் உரிமையாளர் கடையை பூட்டி சென்றார். நள்ளிரவு சமயம் மர்மநபர்கள் கடைக்கு வந்தனர். அவர்கள் கடையின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர்.

  பின்னர் அங்கிருந்த ரூ. 5 லட்சம் பணத்தை கொள்ளையடித்து சென்றனர். இன்று காலை உரிமையாளர் கடையை திறக்க வந்தார்.

  அப்போது கடை திறந்து கிடப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது கடையில் இருந்த ரூ. 5 லட்சம் பணம் கொள்ளை போனது கண்டு திடுக்கிட்டார். இந்த பணம் வீடு கட்டுவதற்காக உரிமையாளர் வைத்திருந்தார்.

  இதுகுறித்து கடை உரிமையாளர் செஞ்சி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குபதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகிறார்கள்.
  Next Story
  ×