என் மலர்
உள்ளூர் செய்திகள்

செங்கல்பட்டில் நடைபாதையை ஆக்கிரமித்து இருந்த 100 கடைகள் அகற்றம்- நகராட்சி கமிஷனர் நடவடிக்கை
செங்கல்பட்டு:
செங்கல்பட்டு நகராட்சிக்குட்பட்ட மேட்டுதெரு, பஜார் சாலை, சின்னம்மன் கோயில் தெரு, ராஜாஜிதெரு உள்பட மக்கள் அதிகமாக பயன்படுத்தும் முக்கிய தெருக்கள் மற்றும் நடைபாதைகளை ஆக்கிரமித்து ஏராளமான கடைகள் அமைகப்பட்டு இருந்தன.
இதனால் செங்கல்பட்டு நகரத்தில் சாலைகள், தெருக்கள் மற்றும் நடைபாதைகளில் செல்லும் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர். இதுபற்றி மாவட்ட நிர்வாகத்துக்கு ஏராளமான புகார்கள் வந்தன.
இதையடுத்து செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல் நாத் உத்தரவின் பேரில் நகராட்சி ஆணையர் ராஜலட்சுமி மேற்பார்வையில் நகரமைப்பு ஆய்வாளர்கள் செந்தில் குமார், செழியன், சுதாகர் ஆய்வாளர்கள் பாஸ்கர், பால்டெவிஸ் மற்றும் நகராட்சி ஊழியர்கள் ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.
மேட்டுத்தெரு, பஜார் சாலை உள்ளிட்ட பகுதிகளில் நடைபாதையை ஆக்கிரமித்து இருந்த 100 கடைகளை அகற்றினர். கடைகளின் உரிமையாளர்கள் தங்கள் எல்லையில் இருந்து நகராட்சி நடைபாதைகள் மற்றும் சாலைகளை ஆக்கிரமிப்பு செயதால் நகராட்சி நிர்வாகம் தகுந்த நடவடிக்கை மேற்கொள்ளும் என்று கடை உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
செங்கல்பட்டு டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் வடிவேல் முருகன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பாணியில் ஈடுபட்டனர்.
செங்கல்பட்டு டவுன் போலீஸ் நிலையம் எதிரே பஜார் வீதியில் செயல்பட்ட சுமார் 50 காய்கறி கடைகளை அருகில் உள்ள உழவர் சந்தையில் செயல்பட அதிகாரிகள் அறிவுறுத்தினர்.






