என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புபடம்.
    X
    கோப்புபடம்.

    தீ தடுப்பு குறித்து விழிப்புணர்வு நோட்டீஸ் விநியோகம்

    தீயணைப்பு நிலைய அலுவலர் கோபால் தலைமையில் உடுமலை பஸ் நிலையத்தில் மக்களுக்கு விழிப்புணர்வு நோட்டீஸ்களை தீயணைப்பு வீரர்கள் வினியோகித்தனர்.
    உடுமலை:

    தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை சார்பில் நாளை 20-ந்தேதி வரை, தீத்தொண்டு நாள் வார விழா கடைபிடிக்கப்படுகிறது. 

    இதையொட்டி உடுமலை தீயணைப்பு நிலையம் சார்பில் தீ விபத்துகளை தவிர்ப்பதற்கான விழிப்புணர்வு மக்களிடையே ஏற்படுத்தப்பட்டு வருகிறது. 

    தீயணைப்பு நிலைய அலுவலர் கோபால் தலைமையில் உடுமலை பஸ்  நிலையத்தில் மக்களுக்கு விழிப்புணர்வு நோட்டீஸ்களை தீயணைப்பு வீரர்கள் வினியோகித்தனர். 

    அதில் தீ விபத்தை தவிர்ப்பதற்கான பல்வேறு விழிப்புணர்வு வாசகங்கள் இடம் பெற்றிருந்தன.
    Next Story
    ×