என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்
தனிநபர் கழிப்பிடம் திட்டத்துக்கான மானியத்தை உயர்த்த வேண்டுகோள்
செங்கல், சிமென்ட், மணல் கம்பி, கான்கிரீட் தொட்டி, பீங்கான் கழிப்பறை, மேற்கூரை உள்ளிட்ட அனைத்தும் பல மடங்கு விலை உயர்ந்துள்ளன.
திருப்பூர்:
சுகாதாரத்தை பேணிக்காக்கவும், திறந்தவெளி கழிப்பிடம் இல்லாத கிராமங்களை உருவாக்கவும், மத்திய அரசு தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ், மானியத்துடன் கூடிய தனிநபர் கழிப்பிடம் கட்டும் திட்டத்தை கொண்டு வந்தது.
இத்திட்டத்தின் கீழ் ஒவ்வொருவரும் தங்கள் இல்லத்தில் தனிநபர் கழிப்பிடம் அமைத்துக்கொள்ள 12 ஆயிரம் ரூபாய் மானியம் வழங்கப்படுகிறது.
திட்டம் துவங்கிய நாள் முதல் இந்த மானியம் உயர்த்தப்படவில்லை. தற்போது நிலவும் உயர்வை கருத்தில் கொண்டு திட்டத்துக்கான மானியத்தை உயர்த்த வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், செங்கல், சிமென்ட், மணல் கம்பி, கான்கிரீட் தொட்டி, பீங்கான் கழிப்பறை, மேற்கூரை உள்ளிட்ட அனைத்தும் பல மடங்கு விலை உயர்ந்துள்ளன.
இதுதவிர வேலை ஆட்கள் கூலியும் குறைந்தபட்சம் 700 ரூபாய்க்கு மேல் உள்ளது. அரசு அளிக்கும் மானியத்தில் கழிப்பறை கட்டுவது என்பது நடுத்தர, மற்றும் அடித்தட்டு மக்களால் இயலாது. எனவே மானியத்தை உயர்த்தி வழங்க வேண்டும். மத்திய அரசு பரிசீலனை செய்ய வேண்டும் என்றனர்.
Next Story






