என் மலர்
உள்ளூர் செய்திகள்

ராமநாதபுரம் கோட்டை நுழைவு வாயிலின் பழைய படம்
தொல்லியல் ஆய்வாளர்கள் கருத்து
பண்பாட்டை காக்க மறந்து விடக்கூடாது என தொல்லியல் ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
ராமநாதபுரம்
பல்வேறுபட்ட பண்பாடுகள், நினைவுச் சின்னங்கள், வழிபாட்டு இடங்கள், இயற்கை அமைப்பு, தொல்லி யல் தளங்கள் என பன்முகத்தன்மை கொண்ட ஒரு சிறிய உலகமாக இந்தியா திகழ்கிறது.
ஒவ்வொரு இனத்துக்கும் வளமான பாரம்பரியம், வரலாறு இருக்கும். இளைய தலைமுறையினர் அவற்றை அறிந்துகொள்ளவும், பாரம்பரியச் சின்னங்களை போற்றிப் பாதுகாக்கும் மனப்பான்மையை அவர்களிடம் உருவாக்கவும் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல்18 அன்று உலகப்பாரம்பரிய தினம் கொண்டாடப்படுகிறது.
யுனெஸ்கோ நிறுவனம் உலகம் முழுவதும் உள்ள தொல்லியல், பாரம்பரியம் மிக்க இடங்களை உலகப் பாரம்பரியச் சின்னங்களாக அறிவிக்கிறது. இதில் இயற்கைப் பாரம்பரியச் சின்னங்களும் அடங்கும்.
தஞ்சாவூர், கங்கை கொண்ட சோழபுரம், தாராசுரம் ஆகிய சோழர்கால கோவில்களும், மாமல்லபுரத்தில் உள்ள பல்லவர் கால நினைவுச் சின்னங்களும், நீலகிரி மலை ரெயில்பாதை, மேற்குத்தொடர்ச்சி மலை ஆகிய இயற்கைப் பாரம்பரிய களங்களும் தமிழகத்தில் உள்ள உலகப் பாரம்பரியச் சின்னங்கள் ஆகும்.
மன்னார் வளைகுடா, பாம்பன் ரெயில் பாலம், அழகன்குளம் அகழாய்வு, தேவாரப் பாடல் பெற்ற திருவாடானை, ராமேசுவரம், மாணிக் கவாசகர் பாடல் பெற்ற உத்தர கோசமங்கை ஆகிய சைவக் கோவில்கள், திருமங்கையாழ்வார் பாடல் பெற்ற 108 வைணவ திவ்விய தேசங்களில் 44வதாக போற்றப்படும் திருப்புல் லாணி, அரேபியத் தொடர் பினால் சிறப்பு பெற்று மதநல்லிணக்கம் காத்துவரும் எர்வாடி, ஓரியூர் கிறிஸ்துவ தேவாலயம், மாவட்டம் முழுதும் பரவலாகக் காணப்படும் மான்கள், பல நூற்றாண்டுகள் வாழும் பெரிய அளவிலான பொந்தன் புளி மரங்கள், பாரம்பரிய நெல் ரகங்கள், மூலிகைத் தாவரங்கள் ஆகியவை மட்டுமின்றி ராம நாதபுரம் மாவட்டத்தின் பெரும்பான்மை மக்கள் தாய்வழிச் சமூகமாக மிகப் பழங்காலம் முதல் இருந்து வருவதும் சிறப்புக்குறியதாகும்.
பாரம்பரியத்துடன் இணைந்த தொல்லியல், வரலாறு, புவியியல், அறிவியல், மானிடவியல், சமூகவியல், கலை, பொறியியல் போன்ற பல துறைகளில் அறிஞர்களை இணைத்து பாரம்பரியம் சார்ந்த ஆய்வுகள் நடத்தப்படவேண்டும். இது தொடர்பாக ராம நாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவன தலைவர், ராஜகுரு கூறியதாவது:&
அரசால் பாதுகாக்கப்படும் தொல்லியல் சின்னங்களைக் கூட, அத்துமீறி மது அருந்தும் இடங்களாக்கும் போது பாதுகாக்கப்படாத நினைவுச் சின்னங்கள் பற்றிச் சொல்ல வேண்டியதில்லை. பல ஆயிரம் ஆண்டுகள் பழமை யான கல்வெட்டுகள், ஓவி யங்களில் பெயிண்டால், உளியால் தங்கள் பெயர் களை எழுதி வைப்பதும், காதல் கதைகள் பேசும் இடங்களாக பாரம்பரிய சின்னங்களை காதல் ஜோடிகள் பயன்படுத்து வதுமான செயல்பாடுகள் நமது பாரம்பரியத்தைக் காக்க எவ்வளவு விழிப்புணர்வுடன் நாம் செயல்பட வேண்டி உள்ளது என்பதை காட்டும்.
வரலாறு, பண்பாடு ஆகியவை அதைத் தெரிந்தவர்களால் தான் அடுத்த தலைமுறைக்கு பரப்பப் படுகிறது. பண்பாட்டைக் காப்பதில் பெண்களே சிறந்து விளங்குகிறார்கள். பாரம்பரியத்தை வெறுமனே படிப்பவர்களாக இல்லாமல் அதன் மரபை, தொன்மையை பின்பற்றுபவர்களாகவும், காப்பவர்களாகவும், பிறருக்கு கற்றுத் தருபவர்களாகவும் இருந்தால் தான் பண்பாடு காக்கப்படும் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Next Story






