என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  கொள்ளை
  X
  கொள்ளை

  விழுப்புரம் அருகே வியாபாரி வீட்டில் நகை-பணம் கொள்ளை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  அடுத்தடுத்து தொடர் கொள்ளை சம்பவம் நடந்திருப்பது அப்பகுதியில் உள்ள பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
  கண்டமங்கலம்:

  விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் அருகே பூஞ்சோலைகுப்பம் பகுதியை சேர்ந்தவர் ராஜன். இவர் புதுவை கடைவீதியில் பழ கடை வைத்துள்ளார். இவரது மனைவி கலையரசி (வயது 35) மகன் தீபதர்‌ஷன். நேற்று கலையரசி மகன் தீபதர்சன் மற்றும் இவரது உறவினர் ஒருவருடன் வீட்டில் இரவு தூங்க சென்றனர்.

  இந்நிலையில் அதிகாலை 2 மணி அளவில் முகமூடி அணிந்த 4 மர்மநபர்கள் இந்த பழ வியாபாரி வீட்டிற்கு வந்தனர். வீட்டின் முன்பக்க கதவை உடைத்து உள்ளே நுழைந்தனர். இவர்கள் உள்ளே வரும் சத்தம் கேட்டு தூங்கிக்கொண்டிருந்த கலையரசி திடுக்கிட்டு எழுந்தார். பின்னர் அந்த 4 மர்மநபர்களை பார்த்து அதிர்ச்சி அடைந்த கலையரசி கூச்சலிட்டார். உடனே 4 மர்ம நபர்களும் கத்தியை காட்டி மிரட்டி 12 பவுன் நகைகள் மற்றும் ரூ.65 ஆயிரம் ரொக்கப்பணத்தை பறித்து சென்றனர். இது குறித்து தகவல் அறிந்த விழுப்புரம் ஏ.டி.எஸ்.பி. தேவராஜ் மற்றும் கண்டமங்கலம் இன்ஸ்பெக்டர் ரத்தின சபாபதி தலைமையிலான போலீசார் சம்பவ இடத் திற்கு விரைந்து வந்து கொள்ளை நடந்த வீட்டை பார்வையிட்டனர்.

  மேலும் தடயவியல் நிபுணர்களும் மோப்பநாய் ராக்கியும் வரவழைக்கப்பட்டது. தடயவியல் நிபுணர்கள் தடையத்தை சேகரித்தனர். மோப்பநாய் ராக்கி கொள்ளை நடந்த வீட்டிலிருந்து வில்லியனூர் அருகே உள்ள தரைப்பாலம் நோக்கி 6 கிலோ மீட்டர் தூரம் ஓடிச் சென்று மீண்டும் அதே வீட்டிற்கு வந்தது. யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. மேலும் இதுகுறித்து போலீ சார் வழக்கு பதிவு செய்து கொள்ளையடித்து சென்ற மர்ம ஆசாமிகளை வலை வீசி தேடிவருகின்றனர்.

  இதே வீட்டில் கடந்த மாதம் சுமார் ரூ.1 லட்சம் பணத்தை மர்மநபர்கள் திருடிச் சென்றது குறிப்பிடத்தக்கது. அடுத்தடுத்து தொடர் கொள்ளை சம்பவம் நடந்திருப்பது அப்பகுதியில் உள்ள பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
  Next Story
  ×