என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    சரக்கு வாகனங்களில் தொழிலாளர்கள் ஆபத்தான பயணம்

    சரக்கு வாகனங்கள் பொருட்களை எடுத்துச்செல்லவே கட்டமைப்பு செய்யப்பட்டுள்ளன. இதில் ஆட்கள் நின்று செல்லவோ, அமர்ந்து செல்லவோ அனுமதி இல்லை.
    மடத்துக்குளம்:

    மடத்துக்குளம் தாலுகா பகுதியில் 30க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இங்குள்ள விளைநிலங்கள் உள்ள பகுதிக்கு பஸ்கள் சென்று திரும்புவது இல்லை. இந்த நிலங்களில் நடவு செய்தல், களை எடுத்தல், நீர்ப்பாசனம் செய்தால், பாத்திமாற்றி கட்டுதல், கரும்பு சோகைவெட்டுதல், கரும்பு வெட்டுதல், நெல் அறுவடை உள்ளிட்ட பலவகையான வேலைகளில் விவசாய கூலித்தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். 

    இதில் பலர் தங்கள் இருப்பிடத்திலிருந்து வேலைக்கு சென்று திரும்ப சரக்கு வாகனங்களை பயன்படுத்துகின்றனர்.

    இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:

    சரக்கு வாகனங்கள் பொருட்களை எடுத்துச் செல்லவே கட்டமைப்பு செய்யப்பட்டுள்ளன. இதில் ஆட்கள் நின்று செல்லவோ, அமர்ந்து செல்லவோ அனுமதி இல்லை. அப்படி சென்றால் அவர்களுக்கு போதிய பாதுகாப்பும் கிடையாது. இந்த நிலையில், விவசாய தொழிலாளர்கள் சரக்கு வாகனங்களில் சென்று திரும்புகின்றனர். 

    இவர்கள் தாங்கள் வேலை செய்யும் நிலங்களுக்கு அருகிலேயே வாகனங்கள் செல்வதால் இந்த பயணத்தை விரும்புகின்றனர். இது தவிர பலரும் ஒன்றிணைந்து செல்லும்போது பயண செலவு குறைகிறது. ஆனால் இதில் உள்ள ஆபத்தை அவர்கள் உணர்வதில்லை. இதுகுறித்து நடவடிக்கை மேற்கொண்டு ஆபத்தான பயணத்தை தடுக்க வேண்டும் என்றனர்.
    Next Story
    ×