search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சரக்கு வாகனங்கள்"

    • போக்குவரத்து கட்டுப்பாடுகளை மீறுவதால் கடைவீதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.
    • போக்குவரத்து நெரிசலை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    பல்லடம் :

    பல்லடம் கடைவீதியில் தினசரி மார்க்கெட், உழவர் சந்தை, வணிக வளாகங்கள் உள்ளன .பல்லடத்தின் இதயப் பகுதியான கடைவீதியில் போக்குவரத்து நெரிசல்களை தவிர்க்கும் பொருட்டு போலீசார் கடைவீதியில் சரக்கு வாகனங்கள் செல்வதற்கு காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை தடை விதித்துள்ளனர். இந்த நிலையில் சில சரக்கு வாகனங்கள், போக்குவரத்து கட்டுப்பாடுகளை மீறுவதால் கடைவீதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.

    இது குறித்து பொதுமக்கள் கூறியதாவது:- கடைவீதியில் சரக்கு வாகனங்கள் செல்வதற்கு நேர கட்டுப்பாட்டை போக்குவரத்து போலீசார் விதித்துள்ளனர். ஆனால் சரக்கு வாகனங்கள் அதனை பின்பற்றுவது இல்லை.

    சந்தை நாளன்று கடைவீதியில் அதிக கூட்டம் இருக்கும். அப்படி இருந்தும் சரக்கு வாகனங்களைக் கொண்டு வந்து கடைவீதியில் நிறுத்தி சரக்குகளை இறக்குகின்றனர். இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் நடந்து செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது.

    எனவே போக்குவரத்து போலீசார் கட்டுப்பாடுகளை மீறும் சரக்கு வாகனங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்து, போக்குவரத்து நெரிசலை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு பொதுமக்கள் தெரிவித்தனர்.

    ×