என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்புப்படம்
புதுவண்ணாரப்பேட்டையில் 11-ம் வகுப்பு மாணவரை அரிவாளால் வெட்டிய கும்பல்
புதுவண்ணாரப்பேட்டையில் 11-ம் வகுப்பு மாணவரை அரிவாளால் வெட்டிய கும்பல் குறித்து போலீசார் வழக்குப்பதிவுசெய்து அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்துவருகின்றனர்.
ராயபுரம்:
புதுவண்ணாரப்பேட்டை தேசிய நகரைச் சேர்ந்தவர் கவியரசன் இவரது மகன் பார்த்திபன். அதே பகுதியில் உள்ள மாநகராட்சி பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் காற்றுக்காக வீட்டு வாசலில் கட்டிலில் படுத்து உறங்கிய போது நள்ளிரவில் வந்த மர்மகும்பல் பார்த்திபனை கத்தியால் தலையில் நான்கு இடங்களில் வெட்டிவிட்டு தப்பியோடியது.
இதில் வலி தாங்க முடியாமல் அலறி துடித்ததை பார்த்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்த்தனர். சம்பவம் குறித்து புதுவண்ணாரப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவுசெய்து அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்துவருகின்றனர்.
மேலும் மர்ம கும்பல் வேறு யாரையாவது கொலை செய்ய வந்து தவறுதலாக பார்த்திபன் மீது தாக்குதல் நடத்தினார்களா? அல்லது மாணவர்களிடையே ஏற்பட்ட முன்விரோதத்தினால் இந்த தாக்குதல் நடைபெற்றதா என பல்வேறு கோணங்களில் புதுவண்ணாரப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Next Story