search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருகல்யாண அலங்காரத்தில் சுவாமி.
    X
    திருகல்யாண அலங்காரத்தில் சுவாமி.

    உத்தமசோழபுரம் கரபுரநாதர் கோவிலில் சுவாமி திருக்கல்யாணம்

    உத்தமசோழபுரம் கரபுரநாதர் கோவிலில் திருக்கல்யாண நிகழ்ச்சி நடந்தது.
    சேலம்:

    சேலம் அருகே கொண்டலாம்பட்டி அடுத்துள்ள உத்தமசோழபுரத்தில் பிரசித்தி பெற்ற கரபுரநாதர் சாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் சித்ரா பவுர்ணமி தேரோட்ட திருவிழா கடந்த 13-ந்தேதி தொடங்கியது. அன்று காலை கணபதி ஹோமம், மாலையில் வாஸ்துசாந்தி பூஜை, அன்னதானம் ஆகியவை நடந்தன.

    மறுநாள் 14-ந்தேதி காலை தமிழ் புத்தாண்டு, பிரதோஷ விழா, குரு பெயர்ச்சிநாள், கொடியேற்று விழா ஆகிய 4 நிகழ்ச்சிகள் ஒரே நாளில் நடந்தன.

    இதனை தொடர்ந்து கோவில் வளாகத்தில் சிவன், பார்வதி சோமஸ் கந்தர் சாமிகள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். பின்னர் காலை 11 மணிக்கு தேர் கலசம் வைத்தல், மாலையில் யாகசாலை பூஜையை தொடர்ந்து அன்ன தானம் வழங்கப்பட்டது.

    நேற்று காலையில் பிச்சாண்டவர் உற்சவம், மாலையில் திருக்கல்யாணம் நிகழ்ச்சி நடந்தது. பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இன்று காலையில் சாமிகளுக்கு அபிஷேகம், மதியம் 12 மணிக்கு பவுர்ணமிபூஜையும் நடைபெற்றது.  மாலை 4 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது.

    இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம்பிடித்து இழுக்கின்றனர். இதையடுத்து கோவிலின் விழாக்குழு வினர் சார்பில் அன்னதானம் வழங்கப் படுகிறது.

    இதை தொடர்ந்து நாளை(ஞாயிற்றுக் கிழமை) காலை நடராஜர் தரிசனம், வசந்த உற்சவம், கொடி இறங்குதல், பாலிகை விடுதலும், மாலை 6 மணிக்கு கால பைரவர் பூஜை, இரவு 7 மணிக்கு சத்தாபரணம் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

    இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் ஒன்றிய தி.மு.க. செயலாளர் சுரேஷ்குமார், முன்னாள் வேளாண்மை துறை அமைச்சர் உதவியாளர் சேகர், ஜெயக்குமார், தக்கார் புனிதராஜ், செயல் அலுவலர் சங்கர் மற்றும் கோவில் பணியாளர்கள்  செய்து வருகின்றனர். இந்த தேரோட்ட விழாவில் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்துகொள்கிறார்கள்.
    Next Story
    ×