
சேலம் அருகே கொண்டலாம்பட்டி அடுத்துள்ள உத்தமசோழபுரத்தில் பிரசித்தி பெற்ற கரபுரநாதர் சாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் சித்ரா பவுர்ணமி தேரோட்ட திருவிழா கடந்த 13-ந்தேதி தொடங்கியது. அன்று காலை கணபதி ஹோமம், மாலையில் வாஸ்துசாந்தி பூஜை, அன்னதானம் ஆகியவை நடந்தன.
மறுநாள் 14-ந்தேதி காலை தமிழ் புத்தாண்டு, பிரதோஷ விழா, குரு பெயர்ச்சிநாள், கொடியேற்று விழா ஆகிய 4 நிகழ்ச்சிகள் ஒரே நாளில் நடந்தன.
இதை தொடர்ந்து நாளை(ஞாயிற்றுக் கிழமை) காலை நடராஜர் தரிசனம், வசந்த உற்சவம், கொடி இறங்குதல், பாலிகை விடுதலும், மாலை 6 மணிக்கு கால பைரவர் பூஜை, இரவு 7 மணிக்கு சத்தாபரணம் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.
இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் ஒன்றிய தி.மு.க. செயலாளர் சுரேஷ்குமார், முன்னாள் வேளாண்மை துறை அமைச்சர் உதவியாளர் சேகர், ஜெயக்குமார், தக்கார் புனிதராஜ், செயல் அலுவலர் சங்கர் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர். இந்த தேரோட்ட விழாவில் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்துகொள்கிறார்கள்.