என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.
தளஞ்சிப்பாளையம் மயான பாதையை மேம்படுத்த கோரிக்கை
கருக்கன்காட்டுப்புதூர் ஊருக்குள் செல்லும் துவக்கப்பள்ளி முதல் வடுகபாளையும் வரையிலான 300 மீட்டர் சாலையை புதுப்பிக்க நிதி ஒதுக்க வேண்டும்.
அவிநாசி:
தளஞ்சிப்பாளையம் மயானம் செல்லும் பாதையை மேம்படுத்த வேண்டும் என அவிநாசி ஊராட்சி ஒன்றிய தலைவரிடம் நடுவச்சேரி ஊராட்சி தலைவர் வரதராஜன் மனு அளித்தார்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
நடுவச்சேரி ஊராட்சி தளஞ்சிப்பாளையம் பகுதியில், 800 மீட்டர் தூர சாலையில் போடப்பட்ட தார் பெயர்ந்து, குண்டும் - குழியுமாக இருப்பதால், இங்கு தார் ரோடு போட நிதி ஒதுக்க வேண்டும். தளஞ்சிப்பாளையம் மயானம் செல்லும் பாதையை மேம்படுத்த வேண்டும்.
கருக்கன்காட்டுப்புதூர் ஊருக்குள் செல்லும் துவக்கப்பள்ளி முதல் வடுகபாளையும் வரையிலான 300 மீட்டர் சாலையை புதுப்பிக்க நிதி ஒதுக்க வேண்டும். மாரப்பம்பாளையம் ஏ.டி., காலனியில் சமுதாய சுகாதார வளாகம் அமைக்க வேண்டும்.
அங்கு வசிக்கும் 250 குடியிருப்புவாசிகள் பயன்பெறும் வகையில் சிமென்ட் கான்கிரீட் சாலை அமைக்க வேண்டும். நடுவச்சேரி பெருமாள் கோவில் மேற்கு பகுதியில், 100 மீட்டர் தூரத்துக்கும், புதுக்காலனி பகுதியில், 150 மீட்டர் தூரத்துக்கும், சிமென்ட் சாலை அமைக்க வேண்டும். இப்பணிகளை மேற்கொள்ள நிதி ஒதுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
Next Story






