search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புபடம்.
    X
    கோப்புபடம்.

    திருப்பூர் வழியாக மைசூர்- திருவனந்தபுரத்திற்கு ரெயில் இயக்கம்

    மறுமார்க்கமாக 17-ந் தேதி மாலை, 4:55 மணிக்கு திருவனந்தபுரத்தில் புறப்படும் ரெயில் மறுநாள் மதியம் 3:30 மணிக்கு மைசூரு சென்று சேரும்.
    திருப்பூர்:

    பயணிகள் கூட்ட நெரிசலை சமாளிக்க, திருவனந்தபுரத்தில் இருந்து சென்னை மற்றும் மைசூருக்கு 2 ரெயில்கள் இயங்க தெற்கு ரெயில்வே சேலம் கோட்டம் ஒப்புதல் வழங்கியுள்ளது. 

    அதன்படி நேற்று முதல் மைசூர் - திருவனந்தபுரம் ரெயில் இயங்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

    மதியம் 2:15 மணிக்கு மைசூரில் புறப்படும்  ரெயில்  மண்டியா, பெங்களூரு, கிருஷ்ணராஜபுரம், பங்கரூபேட், சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை, பாலக்காடு, திருச்சூர், ஆலுவா, எர்ணாகுளம் உள்ளிட்ட நிலையங்களில் நின்று மறுநாள் காலை 8:10 மணிக்கு திருவனந்தபுரம் சென்று சேரும்.

    மறுமார்க்கமாக 17-ந் தேதி மாலை, 4:55 மணிக்கு திருவனந்தபுரத்தில் புறப்படும் ரெயில் மறுநாள் மதியம் 3:30 மணிக்கு மைசூரு சென்று சேரும். 

    கொரோனா ஊரடங்கின் போது நிறுத்தப்பட்ட சென்னை - திருவனந்தபுரம் (வாராந்திர சிறப்பு ரெயில்) நாளை 15-ந்தேதி முதல் மீண்டும் இயக்கத்துக்கு வருகிறது.

    சென்னையில் மாலை 4 மணிக்கு புறப்படும் ரெயில் மறுநாள் காலை 7 மணிக்கு திருவனந்தபுரம் சென்று சேருகிறது. மறுமார்க்கமாக 17-ந்தேதி இரவு, 7:15 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 10:15 மணிக்கு சென்னை சென்று சேரும். இந்த ரெயில் ஈரோட்டில் புறப்பட்டு நேரடியாக கோவை சென்று சேரும்.  

    திருப்பூரில் நிற்காது.மேற்கண்ட இரு ரெயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு துவங்கி நடந்து வருகிறது என சேலம் ரெயில்வே கோட்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.
    Next Story
    ×