search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மழை
    X
    மழை

    தேனி மாவட்டத்தில் தொடர் மழை- வைகையில் இருந்து மதுரைக்கு திறக்கப்படும் தண்ணீர் குறைப்பு

    தேனி மாவட்டத்தில் தொடர் மழை பெய்து வரும் நிலையில் வைகையிலிருந்து மதுரைக்கு திறக்கப்படும் தண்ணீரின் அளவு மேலும் குறைக்கப்பட்டுள்ளது.
    கூடலூர்:

    மதுரையில் பிரசித்தி பெற்ற கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்வுக்காக கடந்த 2 நாட்களுக்கு முன்பு வைகை அணையிலிருந்து வினாடிக்கு 1000 கனஅடி நீர் திறக்கப்பட்டது. நேற்று இந்த தண்ணீரின் அளவு 750 கனஅடியாக குறைக்கப்பட்டது.

    அணையிலிருந்து திறக்கப்பட்ட நீர் மதுரையை சென்றடைந்து விட்டதாலும் தற்போது மதுரை மாவட்டத்திலும் பரவலாக மழை பெய்து வருவதாலும் வைகையிலிருந்து திறக்கப்பட்ட தண்ணீரின் அளவு 500 கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது.

    நாளை இந்த தண்ணீரின் அளவு மேலும் குறைக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இன்று காலை நிலவரப்படி வைகை அணையின் நீர்மட்டம் 68.18 அடியாக உள்ளது. வரத்து 266 கனஅடி, சித்திரை திருவிழாவிற்காக 500 கனஅடி நீர் ஆற்றின் வழியாகவும், மதுரை மாநகர குடிநீருக்காக 72 கனஅடி பைப்லைன் மூலமாகவும் வெளியேற்றப்படுகிறது. நீர் இருப்பு 5363 மி.கனஅடியாக உள்ளது.

    இதேபோல் முல்லை பெரியாறு அணையின் நீர்பிடிப்பு பகுதியிலும் தொடர்ந்து மழை பெய்து வருவதால் நீர் மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. அணையின் நீர்மட்டம் இன்று 127.35 அடியாக உள்ளது. வரத்து 1100 கனஅடி, திறப்பு 100 கனஅடி, இருப்பு 4126 மி.கனஅடி.

    மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 34.50 அடி, வரத்து 61 கனஅடி, சோத்துப்பாறை நீர்மட்டம் 100.36 அடி, வரத்து 104 கனஅடி, திறப்பு 100 கனஅடி.

    தொடர்மழை காரணமாக தேனி மாவட்டத்தில் உள்ள அணைகளுக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்த வண்ணம் உள்ளது. அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

    பெரியாறு 5.4, தேக்கடி 3, கூடலூர் 19.8, உத்தமபாளையம் 5.2, வீரபாண்டி 64.2, வைகை அணை 3.8, மஞ்சளாறு 2, சோத்துப்பாறை 28, பெரியகுளம் 44, போடி 4.2, அரண்மனைப்புதூர் 4.6, ஆண்டிபட்டி 3.8 மி.மீ. மழையளவு பதிவாகி உள்ளது.
    Next Story
    ×