என் மலர்
உள்ளூர் செய்திகள்

இணையதளத்தில் பதிவு.
இணையதளத்தில் பதிவு செய்ய வலியுறுத்தல்
விருதுநகரில் காளை உரிமையாளர்கள், வீரர்கள் பற்றிய விவரங்களை இணையதளத்தில் பதிவு செய்யுமாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
விருதுநகர் மாவட்டத்தில் இந்த வருடத்திற்கான ஜல்லிக் கட்டு நிகழ்வுகள் அரசாணை பெற்று நடத்தப்பட உள்ளது. கடந்த ஆண்டுகளில் அச்சிடப்பட்ட டோக்கன் மூலம் காளைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டு வந்தது.
தற்போது அரசின் நெறிமுறைகளுக்குட்பட்டு விருதுநகர் மாவட்டத்தில் ஆன்லைனில் ஜல்லிக்கட்டு காளைகளுக்கும் மாடுபிடி வீரர்களுக்கும் தனித்தனியாக உரிய ஆவணங்கள் மற்றும் விவரங்களுடன் பதிவு செய்யும் முறை நடப்பாண்டு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
எனவே காளை உரிமையாளர்கள் தங்களது பெயர், கைபேசி எண், முழு முகவரி, ஆதார் எண், மின்னஞ்சல் மற்றும் காளை உதவியாளர் பெயர் மற்றும் கைப்பேசி எண், காளையின் இனம், வயது, உயரம், நிறம், கொம்பின் நீளம், கொம்பு களுக்கு இடையே உள்ள இடைவெளி, உள்நாட்டினம், பல் வரிசைகள், காளையின் அடையாளம், சான்று பெற்ற கால்நடை மருந்தகத்தின் பெயர், காளைக்கு தடுப்பூசி செலுத்தப்பட்ட விவரம், ஜல்லிக்கட்டு நிகழ்வு நடைபெறவுள்ள இடம் ஆகிய விவரங்களை இணையத்தில் பதிந்தும் மற்றும் ஆதார் அட்டை, காளைகளுக்கு கால்நடை மருத்துவர்களால் வழங்கப்பட்ட உடல் தகுதிச் சான்று, காளையின் உரிமை யாளர் மற்றும் உதவியாளர் காளையின் அருகில் உள்ளவாறு எடுக்கப்பட்ட சமீபத்திய காளையின் புகைப்படம் ஆகிய ஆவணங்களை இ-சேவை மையங்கள் மூலம் பதிவேற்ற மும் செய்ய வேண்டும்.
மேலும் காளைகளை தழுவக்கூடிய மாடுபிடி வீரரர்களும் இந்நிகழ்வில் பங்கேற்கும் பொருட்டு ஆன்லைன் முறையில் முன் பதிவு செய்ய வேண்டியுள்ளது. அந்நேரம் தங்களது பெயர், முழுமுகவரி, மின்னஞ்சல், எடை, இரத்த வகை, தொடர்பு எண், ஆதார் எண், வயது, உயரம் போன்ற விவரங்களுடனும் மற்றும் ஆதார் அட்டை, மருத்துவச் சான்றிதழ், தடுப்பூசி சான்றிதழ், பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகிய ஆவணங்களுடனும் பதிவு செய்து கொள்ள வேண்டும்.
எனவே காளை உரிமை யாளர்கள் மற்றும் மாடுபிடி வீரரர்கள் தங்களது ஆவணங் கள் மற்றும் விவரங்களை விருதுநகர் மாவட்ட தேசிய தகவலியல் மைய இணையதளத்தில்(virudhunagar.nic.in) 12.4.2022 முதல் 16.4.2022
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Next Story






