என் மலர்
உள்ளூர் செய்திகள்

கொட்டும் மழையில் நகராட்சி அலுவலகம் முன்பு சாலையில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அ.தி.மு.க. கவுன்சிலர்கள்.
அ.தி.மு.க. கவுன்சிலர்கள் ஆர்ப்பாட்டம்
பேச அனுமதி மறுத்ததால் கொட்டும் மழையில் அ.தி.மு.க. கவுன்சிலர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
காரைக்குடி
காரைக்குடி நகராட்சியின் சிறப்புக் கூட்டம் தலைவர் முத்துதுரை தலைமையில் நடந்தது. துணைத்தலைவர் குணசேகரன் முன்னிலை வகித்தார். ஆணையாளர் லட்சுமணன் உள்ளிட்ட அதிகாரிகள், கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.
தமிழக அரசு கொண்டு வந்துள்ள சொத்துவரி உயர்த்துவது சம்பந்தமாக நடைபெற்ற இந்த கூட்டத்தில் வரி உயர்வை எதிர்த்து அ.தி.மு.க. உறுப்பினர்கள் கருப்பு உடை அணிந்து வந்தனர். விவாதம் நடைபெறாமல் கூட்டத்தை தலைவர் முடித்து விட்டதால் ஆவேச மடைந்த அ.தி.மு.க. கவுன் சிலர்கள் பிரகாஷ், தேவன், குருபாலு, அமுதா, ராதா, கனகவள்ளி ஆகியோர் கொட்டும் மழையில் நகராட்சி அலுவலகம் முன்பு சாலையில் அமர்ந்து ஆர்ப் பாட்டத்தில ஈடுபட்டனர்.
அப்போது அவர்கள் கூறுகையில், தலைவர் உரை முடிந்து உறுப்பினர்கள் பேச முயலும்போது சுகாதார ஆய்வாளர் சுந்தர் குறுக்கிட்டு அரசு கொண்டு வந்துள்ள மஞ்சள்பை திட்டத்தை கூறி விழிப்புணர்வு பதாகையை தலைவர் மற்றும் துணை தலைவர் வெளியிட்டனர். பிறகு ஆணையாளர் சிவகங்கையில் நடைபெற உள்ள அரசு புத்தக கண்காட்சிக்கு அழைப்பிதழ் வழங்கியதைப் பற்றி கூறினார். பிறகு விவாதம் தொடங்கும் என நினைத்தோம். ஆனால் தலைவர் முத்துதுரை விவாதம் நடத்தாமலே தீர்மானங்கள் அனுமதிக்கப்பட்டதாக சொல்லி கூட்டத்தை முடிந்ததாக கூறி வெளியேறிவிட்டார்.
கூட்டம் ஆரம்பிக்கும் போது தமிழ்த்தாய் பாடலும், இறுதியில் தேசியகீதமும் பாடப்பட வேண்டும் என்பது நடைமுறை. அதையும் கடை பிடிக்கவில்லை. இதை கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்தோம் என்றனர். இதனால் நகராட்சி அலுவலகம் முன்பு பரபரப்பு ஏற்பட்டது.
Next Story






