search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வெங்காயம்
    X
    வெங்காயம்

    போச்சம்பள்ளி பகுதியில் வரத்து அதிகரிப்பால் சின்னவெங்காயம் விலை கடும் வீழ்ச்சி

    கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் அதிகளவில் சின்ன வெங்காயம் பயிரிடப்பட்டு வருகிறது.

    மத்தூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பல கிராமங்களில் சின்ன வெங்காயம் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. ஈரம் கலந்த காற்றும், மிதமான தட்பவெட்ப நிலையும் உள்ள பகுதிகளில் மட்டுமே சிறப்பாக சின்ன வெங்காயம் மகசூல் பெற முடியும்.

    அந்த வகையில் கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் அதிகளவில் சின்ன வெங்காயம் பயிரிடப்பட்டு வருகிறது.

    கடந்த மாதங்களில் சின்ன வெங்காயம் ரூ.100 வரை விற்பனை செய்யப்பட்டது. இந்த விலை உயர்வால் ஓட்டல் உரிமையாளர்கள் இல்லத்தரசிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். சமையலுக்கு சின்ன வெங்காயத்தை தவிர்த்து பெரிய வெங்காயத்தை பயன்படுத்தி வந்தனர்.

    இந்நிலையில் வெங்காய விலை திடீர் உயர்வு காரணமாக விவசாயிகள் தங்களது நிலங்களில் சின்ன வெங்காயத்தை அதிக அளவில் சாகுபடி செய்து வந்தார்கள். தற்போது சந்தையில் சின்ன வெங்காயம் வரத்து அதிகமாக உள்ளதால் விலை பலமடங்கு வீழ்ச்சியை சந்தித்துள்ளது. இதனால் சின்ன வெங்காயத்தை சாகுபடி செய்த விவசாயிகள் கவலை அடைந்து கண்ணீர் வடித்து வருகிறார்கள்.

    சாகுபடி செலவைக் கூட வீடு கட்ட முடியாமல் விவசாயிகள் தவித்து வருகிறார்கள். அறுவடை செய்யப்பட்ட சின்ன வெங்காயத்தை குறிப்பிட்ட நாட்களுக்குள் விற்று விட வேண்டும். இல்லாவிட்டால் அவை அழுகி வீணாகி விடும். இதனால் விவசாயிகள் வியாபாரிகள் கேட்ட விலைக்கு விற்பனை செய்யும் பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது ரூ.100-க்கு விற்ற சின்ன வெங்காயம் தற்போது ரூ.10 -க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் ஓட்டல் உரிமையாளர்கள், இல்லத்தரசிகள் மிகவும் மகிழ்ச்சி அடைந்து சின்ன வெங்காயத்தை கிலோ கணக்கில் வாங்கி செல்கிறார்கள்.

    மேலும் போச்சம்பள்ளி சுற்று வட்டார பகுதிகளில் லோடு ஆட்டோவில் சின்ன வெங்காயத்தை கூவி, கூவி வியாபாரிகள் விற்று வருகிறார்கள்.

    Next Story
    ×